Link copied!
Sign in / Sign up
73
Shares

குழந்தைக்கு எத்தனை மணிக்கு ஒருமுறை உணவு கொடுக்க வேண்டும்..?

இளம் தாய்மார்களே! குழந்தை பிறந்தவுடன் உங்களுக்கு குழந்தையை கவனிப்பதே தலையாய கடமையாக இருக்கும்; குழந்தைக்கு எப்பொழுது உணவு கொடுக்க வேண்டும்? என்ன உணவு கொடுக்க வேண்டும்? என்பது பற்றிய குழப்பம் பல தாய்மார்களுக்கு இருக்கலாம். இவ்விஷயத்தில் உங்களுக்கு உதவும் வகையில், இந்த பதிப்பை வடித்துள்ளோம், படித்து பயன் பெறவும்..! 

முதல் மாதம்..!

குழந்தை பிறந்த முதல் நாள் ஓரிரு முறை பாலூட்ட வேண்டி இருக்கும். முதல் வாரத்தில், குழந்தைகளுக்கு 60-120 மிலி பாலினை 40 நிமிடங்களுக்கு அளிக்க வேண்டும்; பின் குழந்தைகள் 15-20 நிமிடங்களில் பாலைக் குடிக்கத் தொடங்கிவிடும். குழந்தைகள் பசியாறும் வரை பால் புகட்டுவது நல்லது; ஒரு நாளைக்கு 8 முறையேனும் பாலூட்ட வேண்டும், குழந்தைகள் பசியோடு இருப்பது தெரிந்தால், பாலூட்டலாம்.

குழந்தைகள் பசியோடு இருப்பதை எப்படி அறியலாம்..? பால் குடிப்பது போன்று சப்தம் எழுப்பினால், கை கால்களை அந்த பக்கம் இந்த பக்கம் அசைத்தால், குழந்தைகள் பசியோடு உள்ளனர் என்று பொருள். குழந்தைகள் பிறந்த பொழுது இருந்ததை விட முதல் ஓரிரு நாட்களில், 10% உடல் எடை குறையலாம்; ஆனால் மீண்டும் அவர்களின் எடை சில நாட்களில் அல்லது வாரங்களில் குழந்தைகளின் எடை அதிகரிக்க வேண்டும்.

நான்கு மாதங்களில்..!

குழந்தைகளின் முதல் 4 மாத காலகட்டத்தில், ஒரு நாளைக்கு 120-210 மிலி பாலினை 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை அளிக்க வேண்டும். புட்டி பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு 120-150 மிலி பாலினை, 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை, 1-3 மாத காலகட்டத்திலும், 150-210 மிலி பாலினை, 2.5-3.5 மணி நேரத்திற்கு ஒரு முறை, 3-4 மாத காலகட்டத்திலும் அளிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் திட உணவுகள் அளிப்பதை தவிர்க்கவும்..

4-6 மாதங்களில்..!

இக்காலகட்டத்தில், குழந்தைகளுக்கு திட உணவுகளைக் கொடுக்கத் தொடங்கலாம்; ஆனால் குழந்தைகள் ஒரு நாளைக்கு 1 லிட்டர் தாய்ப்/புட்டி பாலையாவது அருந்த வேண்டும்; பாலினை 2-4 மணி நேரத்திற்கு ஒரு முறை அளிக்கவும். மசித்த உணவு அல்லது கூழ், கஞ்சி வகைகளை குழந்தைகள் வயிறு நிறையும் வரை கொடுக்கவும். குழந்தைகள் துப்பினால், முகத்தைத் திருப்பிக் கொண்டால், வாயினை மூடிக்கொண்டால், அவர்களின் வயிறு நிரம்பி விட்டதா என்று கவனித்து உணவு அளிப்பதை நிறுத்தவும்..

6-8 மாதங்களில்..!

இக்காலகட்டத்தில் தாய்ப்பால் அளிப்பதை நிறுத்தாது, மூன்று வேளை திட உணவுகளும் அளிக்க வேண்டும். தாய்ப்பாலினை 2-4 மணி நேரத்திற்கு ஒரு முறை அளிக்கவும்..!

8-10 மாதங்களில்..!

இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு புரதம் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டும். மூன்று முறை உணவு அளிக்க வேண்டும்; குழந்தைகள் மேலும் விரும்பினால், தேவை என்றால் மேலும் உணவு அளிக்கலாம்..

10-12 மாதங்களில்..

குழந்தைகளுக்கு 4-5 மணிக்கு ஒரு முறை உணவு அளிக்கவும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை குழந்தை, உணவின் மூலம் பெறுகிறதா என்று உறுதி செய்து கொள்வது நல்லது.

குறிப்புகள்..!

குழந்தைகள் பிறந்த முதல் சில நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 6 டையப்பர்கள் வரை தேவைப்படலாம். அவர்களின் சிறுநீர் மனம் இல்லாமலும், நிறம் இல்லாமலும் இருக்கும்; அவர்களின் மலம் வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்; 2-3 முறைக்கு மேல் மலம் கழிக்கும்.

குழந்தைகள் பிறந்தவுடன் சில நாட்களில் எடை குறைந்து பின், பிறந்த ஓரிரு வாரங்களில் குறைந்த எடையினை, மீண்டும் பெற வேண்டும்; ஒரு நாளைக்கு குழந்தைகள் 2-3 முறைக்கு குறைவாக மலம் கழித்தால், 8 டையப்பர்களுக்கு குறைவாக உபயோகம் இருந்தால் அது குழந்தை சரியான எடையை எட்டவில்லை என்பதை உணர்த்த்தும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon