Link copied!
Sign in / Sign up
43
Shares

குழந்தைக்கு டையப்பரை அணிவிக்கும் பெற்றோரே! உமக்கு உள்ளதா மனசாட்சி?

குழந்தைகள் இரவில் அழாமல் தூங்க மற்றும் நீங்களும் நிம்மதியாக உறங்க, வெளியூர்களுக்கு செல்லுகையில் குழந்தைக்கு சிறுநீர் மற்றும் மலம் கழிந்த துணியை மாற்றும் வேலையை தடுக்க, அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த டயப்பர். ஆனால், நம் இந்திய அன்னைகள், சாதாரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைக்கே அதை அணிவித்து, சோம்பேறியாகிக் கொண்டிருக்கின்றனர்; இதில் அன்னைகளின் சோம்பேறித்தனத்தை பற்றி பேசுவதைக்காட்டிலும், உங்கள் குழந்தைகள் சந்திக்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. வாருங்கள் தோழியரே! அந்த பாதிப்புகள் என்னென்ன என்று இப்பதிப்பில் காணலாம்..!

அக்காலம் - இக்காலம்..! 

அக்காலத்தில் சேலைத்தொட்டிலில் படுத்து, அதிலேயே சிறுநீர் கழித்த குழந்தைகளான நாம் இன்று ஆரோக்கியமாக இல்லையா? யார் சொன்னது ஈரத்தில் படுத்தால் குழந்தையின் நலம் கெடும் என்று. ஈரம் குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்களை தரும், உண்மைதான் ஆனால், 10 நிமிடத்தில் காய்ந்து காணாமல் போகும் சிறுநீர் ஈரம் குழந்தையை ஒன்றும் செய்யாது. 

அந்தக்காலத்தில் எந்த டயப்பர் இணைந்து நாம் வளர்ந்தோம் என்று எண்ணிப்பாருங்கள்..! மேலும் அக்காலத்தில் குழந்தைகளுக்கு துணியை பயன்படுத்தி, அது ஈரமாகிவிட்டால் அதை அலசி பயன்படுத்தினார்கள்; நீங்கள் இன்று இந்த டையப்பருக்கு பயன்படுத்தும் பணத்தில், குழந்தைக்கு துவைத்து துணியை பயணப்படுத்தாமல், தினம் ஒரு புது துணி பயன்படுத்தலாம்.

நடை மாறும்..

டயப்பர் அணிந்து குழந்தைகள் எந்நேரமும் இருப்பதால், அவர்கள் தவழ்தல், நடத்தல் என எல்லாம் தாமதமாக நடைபெறுகிறது; மேலும் குழந்தைகளின் நடை சாதாரணமாக இருப்பதை விட மாறுபடடைகிறது.

 

ஆபத்து..

குழந்தைக்கு இரவு அணிவித்த டயப்பரை அடுத்தநாள் காலை அகற்றுகையில், குழந்தை எத்தனை அசௌகரியத்தை  அனுபவித்திருக்கும்;அதிலேயே சிறுநீர் கழித்து, மலமிருந்து.., ஹப்பா நினைத்துப்பார்க்கவே எத்தனை அருவருப்பு..! இந்த அருவருப்பிற்கு தான் உங்கள் குழந்தைகளை நீங்கள் உள்ளாக்குகிறீர்கள்.

மேலும் இது குழந்தைக்கு எத்தகைய நோய் தொற்றுதலை ஏற்படுத்தும் என்று எண்ணிப்பாருங்கள். அதுவும் பிறப்புறுப்பில் நோய்தொற்று ஏற்படுவது நல்லதா என்று யோசியுங்கள்..!

மனித உடலின் திறந்தவெளி, வாய், கண், காது, நாசித்துளைகள் தவிர்த்து பிறப்புறுப்பு தான் என்பதை மறவாதீர்கள். மேலும் இந்த டயப்பர் குழந்தைகளில் தடுப்புகள் மற்றும் தோல் சிவந்து போதலையும் ஏற்படுத்துகிறது.

நீங்கள் மட்டும் இரவு தூங்குகையில், நைட்டி, கைலி என தளர்வான ஆடைகள் அணிந்து காற்றோட்டமாக தூங்குகையில், குழந்தையை மட்டும் இப்படி இறுக்கம் கலந்த அருவருப்பில் தள்ளுவதில் என்ன நன்மை? என்ன சிறந்த பெற்றோர்?

சுயநலம் - தூக்கம்...!

நீங்கள் இரவு சுகமாக, கண் விழிக்காது என்ற சுயநலத்தில், குழந்தைக்கு அணிவிக்கப்பட்டது தான் டையப்பர்; நீங்கள் இல்லை இது குழந்தையின் தூக்கத்திற்காக நாங்கள் செய்வது என்று கூறினால், நீரே உமது மனசாட்சியிடம் உண்மை என்ன என்று கேட்டுப்பாருங்கள்..!? கட்டாயம் அதில் சில துளி சுயநலம் கலந்துதானிருக்கும்..!

குழந்தையுடன் பயணம் செய்கையில் இதை அணிவிப்பதை சற்று ஒத்துக்கொள்ளலாம்; ஆனால், வீட்டில் சாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எதற்கு இந்த டயப்பர்? மேலும் அது ஈரத்தை உறிஞ்சிய பின்னர் எத்தனை கனமாக இருக்குமென்று அறிவீரா? அந்த கனத்தோடு குழந்தை தன் அன்றாட செயல்களில் ஈடுபடுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை..!

இதையெல்லாம் நாங்கள் உங்கள் குழந்தையின் நலத்திற்காகவே கூறுகிறோம்.! பதிப்பில் யாம் கூறியது தவறு என்று எண்ணினால், உங்களுக்கு என் மனதார்ந்த மன்னிப்பு! 

இதில் உள்ள உண்மையை நீங்கள் உணர்ந்திருந்தால், அத்தனை தமிழ் அன்னைகளுக்கும் அவர்களின் தவறை உணர்த்த, அவர்கள் அதை திருத்த, இந்த பதிப்பை பகிர்ந்து உதவுங்கள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon