Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளுக்கு யோகாவின் நன்மைகள்

உடற்பயிற்சிகளில், யோகா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும், 100 வயது முதியவர் முதல் 3 வயது குழந்தை வரை அனைவரும் செய்கின்றன. எல்லா வயதினருக்கும் யோகா பயனளிக்கிறது எனினும் குறிப்பாக குழந்தைகளுக்கு அவர்கள் ஆரோக்கியமாக வளர மட்டுமல்லாமல், மனதளவிலும், உணர்வளவிலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது. அதனால் உங்களை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கான யோகாவின் நன்மைகளை இங்கே குறிப்பிட்டு இருக்கிறது.

1 கவனத்தை அதிகரித்தல்

நிறைய உடற்பயிற்சிகளும், யோகாவில் தியானமும் கவனத்தை பயன்படுத்தி அவற்றை அதிகரிக்கச் செய்யும். தியானம் அல்லது கவனத்தை அதிகரிக்கும் யோகா செய்வதால் உங்கள் அன்றாட வாழ்வில் மாற்றம் நேரும் அதுமட்டுமின்றி கவனமும் அதிகரிக்கும். ஆதலால், உங்கள் பிள்ளையின் படிப்பும் நன்றாக இருக்கும்.

2 வளையும் தன்மை அதிகரித்தல்

யோகா என்பது நீண்ட செயல் அதன் விளைவு சிறிது காலத்துக்கு பின்னரே தெரியும். வழக்கமான உடற்பயிற்சிகள் விரைவாக விளைவு காட்டும் எனினும், உடலை விறைப்படையச் செய்யும். ஆதலால் உடலில் வளைவுத் தன்மையை குறைக்கும். ஆனால் யோகா, வளைவுத் தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவும்.

3 மனஅழுத்தம் வெளியேற்றல்

பெரியவர்களுக்கு மட்டும் தான் கோபமும் மன அழுத்தமும் இருக்கும் என்று இல்லை. இன்றைய காலகட்டத்தில், தங்கள் பெற்றோர்களை விட பிள்ளைக்குகளுக்கு அதிகமான கோபமும் மன அழுத்தமும் வருகிறது. ஆனால் பெரியவர்களை போல அவ்வுணர்ச்சிகளை எவ்வாறு வெளியேற்றுவது என்று பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. பிள்ளைகள் இவ்வுணர்ச்சிகளை சரிவரக் கையாள்வதற்கும் மனதை அமைதியாக வைத்திருக்கவும் யோகா உதவுகிறது.

4 சுறுசுறுப்புத்தன்மையை அதிகரித்தல்

நவீன காலத்து உணவுகள், விளையாட்டுகள், செயல்கள் மற்றும் கால அட்டவணை, குழந்தைகளைச் சோர்வாக்கி எளிதில் சோம்பேறி ஆக்குகிறது. தற்போதைக்கு இது பெரிய பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரியவர் ஆனா பின்பு எந்த வேலையும் சரிவரச் செய்ய முடியாது. யோகா பிள்ளைகளுக்கு அமைதி, சமாதானம் மற்றும் வளைவுத்தன்மையை பெற உதவுகிறது. இதனால் அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருந்து நிறைய கற்க முடிகிறது.

5 நம்பிக்கை அடைதல்

தன்னம்பிக்கை ஒருவரின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. நம்பிக்கையே, வாழ்வில் சவால்களை சந்தித்து வளர வைக்கிறது. ஆதலால் பிள்ளைகளை நம்பிக்கை அடைய செய்தல் மிகவும் முக்கியமான ஒன்று. பெரிய செயல்களை விட சின்னஞ் சிறு சாதனைகளியே நம்பிக்கை கிடைக்கிறது. யோகா, ஆரோக்கியம் மட்டுமல்லாமல், காலத்திற்கு ஏற்ப சிறு சாதனைகளை செய்ய வைக்கிறது. உதாரணமாக, கையினால் பாதத்தைத் தொடுதல். இந்த சிறு சாதனைகள், உங்கள் பிள்ளைகளை அமைதியாகவும், சமாதானமாகவும், திருப்தி ஆகவும் இருக்க உதவுகிறது.

யோகா கலை, மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியை எந்நேரமும் எந்த இடத்திலும் பெற உதவுகிறது என்று உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிறு வயது முதல் பிள்ளைகள் யோகா கலையை பயின்றால் வளர வளர பெரும் பயனடைவர்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon