Link copied!
Sign in / Sign up
20
Shares

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான 7 காரணங்கள்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதால், எளிதில் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம். குழந்தைகளுக்கு சளி இருமல் ஏற்படுவதை போல், அவ்வப்போது வயிற்றுப்போக்கும் ஏற்படும். இது இயற்கை வழியில் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. இந்த செயல் முறையில் உடலில் உள்ள நீர் மற்றும் உப்பு சத்துக்கள் அதிக அளவில் வெளியேறுகின்றன. இது போல் அடிக்கடி நீரிழப்பு ஏற்பட்டால், குழந்தையின் சருமம் வெளிறி காணப்படும். 

உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும் போது மலத்துடன் சிறுநீர் கழித்தால், நீரிழப்பை தவிர ஏதும் இல்லை. ஆனால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும் போது, 7 முதல் 8 மணி நேரத்திற்கு சிறுநீர் கழிக்காமலோ அல்லது வயிற்றுப்போக்குடன் வாந்தி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இங்கு குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான 7 காரணங்களை பார்க்கலாம்.

1 மருந்து

உங்கள் குழந்தைக்கு ஆண்டிபையோட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தால், அது அவர்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். அதிக சக்தி வாய்ந்த ஆண்டிபையோட்டிக் மருந்துகள், குழந்தையின் சிறிய உடலை கடுமையாய் பாதிப்பதால், அது அவர்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதனாலேயே பெரும்பாலான குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆண்டிபையோட்டிக் பரிந்துரைக்கும் போது, வயிற்றுப்போக்கு மருந்துகளையும் பரிந்துரைக்கிறார்கள்.

2 வாயில் பொருட்களை வைப்பது

உங்கள் குழந்தை 5 முதல் 6 மாதத்தில் இருக்கும் போது கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் வைக்க துவங்கிவிடுவார்கள். குழந்தைகள் விளையாடும் தரை மற்றும் பொம்மைகளில் நோய் கிருமிகள் இருக்கும். அவற்றை குழந்தைகள் வாயில் வைக்கும் போது, கிருமிகள் வயிற்றினுள் சென்று வயிற்று போக்கிற்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தையின் மலம் பச்சையாகவோ, சளி போன்றோ அல்லது துர்நாற்றத்துடனோ இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

3 செரிமான மண்டல பாதிப்பு

குழந்தையின் வயிற்றில் ஏற்படும் பாதிப்பும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். செரிமானமாகாத உணவு, புதிதாக கொடுக்கப்பட்ட உணவினால் ஏற்படும் அலர்ஜி, கடல் உணவு அலர்ஜி, நட்ஸ் அலர்ஜி, லாக்டோஸ் ஒவ்வாமை, தடிப்புகள் மற்றும் உணவு நஞ்சாதல் போன்றவற்றால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

4 பாதுகாப்பற்ற உணவு மற்றும் குடிநீர்

பெரும்பாலான சமயத்தில் பாதிக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவை குழந்தைகள் உட்கொள்வது வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கும். குழந்தைகளுக்கு வெளியிடங்களிருந்து உணவு மற்றும் தண்ணீர் வாங்கி கொடுப்பதும் இதற்கு காரணமாகிறது. எப்போதும் குழந்தைகளுக்கு புதிய மற்றும் வீட்டில் தயாரித்த உணவுகளையே கொடுங்கள்.

5 மலமிளக்கி உணவு

குழந்தைகள் சில விருப்ப உணவுகளை அளவிற்கதிகமாக உண்பார்கள். அதே போல் மலமிளக்கி உணவுகளை அதிகமாக உட்கொள்வது, இயற்கை உபாதையை ஏற்படுத்துவதோடு வயிற்றுப்போக்கிற்கும் வழிவகுக்கும்.

6 சுகாதாரமின்மை

சில சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். முடிந்தவரை வீட்டின் அனைத்து பகுதியிலும் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டியது அவசியம்.

7 வெப்பம்

பெரும்பாலும் குழந்தைகளுக்கு வெயிலின் தாக்கத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படும். சில நேரத்தில் பருவநிலை மாற்றங்களின் காரணமாகவும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு சரியான உடன், குழந்தையின் உடல் எடை குறைந்திருக்கும். சரியான முறையில் ஆரோக்கியமான உணவை கொடுப்பதன் மூலம் அவர்களை பழைய எடைக்கு கொண்டு வர முடியும்.  

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon