Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தைகளுக்கு வரும் ஆட்டிஸம் பிரச்சனை? எதை உணர்த்துகிறது?

சமூகத்தில் ஒன்றிவிட முடியாமல் துடிக்கும் ஒருவருக்கு தான் ஆட்டிஸம் என்பது அதிகம் காணப்படுகிறது. ஒருவருடன் பேசுவதற்கு கூச்சம் கொள்ள, இதனால் நாளடைவில் தனிமை என்பது உங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படக்கூடும். இந்த பழக்கத்தை, குழந்தை பிறப்பிலிருந்தே கவனித்து சரிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. உங்கள் குழந்தைகள், ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் பாதிக்கப்பட்டு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல தொடங்குவார்கள். இதுவும் ஆட்டிஸம் என்பதின் முதல் நிலை தான் என்பதை புரிந்து, அதிலிருந்து அவர்களை திசை மாற்ற செய்ய வேண்டியது அவசியம்.

ஆட்டிஸம் எனும் மன இறுக்கத்தின் நிலைகள்:
முதன்மை ஆட்டிஸ நிலை:

உங்கள் குழந்தைக்கு இந்த ஆட்டிஸம் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணமாக மூன்று இருக்கிறது. அவை,

1. சமூகத்துடன் ஒன்ற கூச்சம் கொள்வது

2. மொழி பிரச்சனையால் பேச கூச்சம் கொள்வது

3. திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வது

ஒரு சிலரை கவனித்து இருப்பீர்கள். ஒரு திரைப்படம் பார்த்தால், அதில் வரும் ஹீரோ போல் செய்வதும், அவர் பேசிய டயலாக்கை திரும்ப பேசுவதும் என செய்வார்கள். இது தான் மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால், மனம் இறுக்கத்துடன் இருக்க, அவர்கள்., நீங்கள் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாமலும் நாளடைவில் போகலாம். அதேபோல், எல்லா மொழியையும் எப்படி அணுகுவது என்ற சூசகத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். பக்கத்து வீட்டு பிள்ளைகள் விளையாட அழைத்தால், அவனை அனுப்பாமல் வீட்டினுள்ளே வைத்துக்கொள்ளாதீர்கள். அவன் நாலு பேருடன் பழகினால் தான் நாளைக்கு சமூகத்தில் கூச்சமின்றி வெற்றி நடைப்போடுவான்.

நரம்பியல் பிரச்சனையால் வரும் ஆட்டிஸம்:

இதற்கான காரணிகளாக இருப்பவை,

1. போதிய தூக்கமின்மை

2. தவறான மன நிலை

3. கவலை கொள்ளுதல்

4. தேவைக்கு மீறிய சுறுசுறுப்பு

5. வலிப்பு தாக்கம்

ஒரு சிலர் மிகவும் சுறுசுறுப்பாக எந்நேரமும் யோசித்துக்கொண்டே இருப்பார்கள். நாம் பைத்தியம் என அழைக்கும் ஒருவர் தான் இந்த நிலையை முழுமையாக அடைந்தவர்கள் என்பதை அறிவீர்களா? ஆம், அவர்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் கொண்ட திறமையின் அதீத எழுச்சியினால் தான் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் நம்மை விட பல மடங்கு வேகமாக யோசிப்பவர்களும் கூட. நாம் செஸ்ஸில் விளையாடும் போது பயன்படுத்தும் மூளையை அவர்கள் எல்லா நேரமும் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு தான்...

உடல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள்:

இதற்கான காரணிகளாக இருப்பது இரண்டே இரண்டு.

1. நோயெதிர்ப்பு குறைபாடு

2. இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனை

உங்கள் குழந்தைகளுக்கு தேவையான சத்துள்ள உணவை சரியான அளவில் கொடுப்பதன் மூலம் இந்த ஆட்டிஸம் உண்டாவதை தடுக்கலாம்.

தாய்மார்களே, இந்த உலகத்தில் மிக கொடிய நோய்களுள் ஒன்று தான் இந்த ஆட்டிஸமும் கூட... உங்கள் குழந்தைகளை ஒருவர் கண் முன்னே காயப்படுத்துவதை பெற்றோர்கள் யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படி இருக்க, ஆட்டிஸம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்துக்கொண்டு, அவர்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்களேன். உங்கள் குழந்தைக்கு பிடித்த விஷயத்தை செய்து தருவதற்கான சூழல் உருவாகுவது மூலமாகவும் ஆட்டிஸத்தை நீங்கள் தவிர்க்கலாம். ஆட்டிஸம் என்பதற்கு ஆக சிறந்த மருந்து, அவர்கள் தேவையை தேடி அதற்கேற்ப அவர்கள் மனதை வலுப்படுத்த நாம் முயல்வதே ஆகும்.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon