Link copied!
Sign in / Sign up
14
Shares

குழந்தைகளுக்கு தொட்டில் முடி உருவாவதற்கான காரணங்களும், தடுக்கும் வழிகளும்

நீங்கள் இந்த வார்த்தையை கேள்விப்பட்டதே இல்லையா? தொட்டில் முடி என்பது உங்கள் குழந்தையின் தலையில் பொடுகு போன்று வெண்மையாய் ஏற்படுவது. இதன் மருத்துவ பெயர் குழந்தைகளுக்கான சீபோர்ரிக் டெர்மடிடிஸ் ஆகும். தொட்டில் முடி என்பதை பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அது நோய் தோற்று அல்ல மற்றும் அதை எளிய முறை சிகிச்சைகளாலேயே சரி செய்ய முடியும். இது உங்கள் பிறந்த குழந்தையின் தலையில் காணப்படுவது பிசுபிசுப்பாக தோன்றினாலும், நீங்கள் இது குறித்து கவலையடைய தேவை இல்லை. இது பொதுவாக குழந்தைகளுக்கு 3 வயது வரை ஏற்படுகிறது.

தொட்டில் முடி ஏற்படுவதற்கான காரணங்கள்

அதை நீக்க முயற்சிக்காதீர்கள். அப்படி நீங்கள் முயற்சிப்பதால் குழந்தையின் சருமத்தில் அழற்சி மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படும். தொட்டில் முடி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் அறியப்படவில்லை. இருப்பினும், மருத்துவர்கள் பெரும்பாலும் தாயிடம் இருந்து குழந்தையை அடைந்த ஹார்மோன்கள் மூலம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த ஹார்மோன்கள் அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுத்திருக்கலாம். மற்றொரு காரணம் பாக்டீரியாவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று.

தொட்டில் முடிக்கான அறிகுறிகள்

1. தோல் செதில்களாக இருப்பது

2. லேசான சிவப்பு நிறத்தில் காணப்படுவது

3 திட்டுதிட்டான, உச்சந்தலையில் தடிமனான மேலோடுகள் போன்று காணப்படுவது

4 வறண்ட அல்லது எண்ணெய் சருமத்தின் மேல் வெள்ளை அல்லது மஞ்சளாக காணப்படுவது

தொட்டில் முடியை சரி செய்யும் வழிகள்

1. ஆலிவ் எண்ணெய்

குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதா என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் பல பெற்றோர்கள் இதனால் பயனடைத்துள்ளார்கள் என்பது சத்தியமான உண்மை. உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் கொஞ்சம் ஆலிவ் எண்ணையை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து விடவும். எண்ணெய் சிறிது நேரம் குழந்தையின் தலையில் இருக்குமாறு செய்யவும். அதன் பின் சிறு துண்டுடன் அதை கழுவிவிடுங்கள். ஆலிவ் எண்ணெய் கிடைக்காதவர்கள், தேங்காய் எண்ணையையும் உபயோகிக்கலாம். இது வீட்டில் எளிமையாக கிடைக்க கூடிய ஒன்று.

2. வெஸ்லின் (Vaseline)

இந்த பெட்ரோல் ஜெல்லி கிட்டத்தட்ட வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உபயோகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் கொஞ்சம் வெஸ்லினை தடவி, இரவு முழுவதும் விட்டுவிடவும். மறுநாள் காலை அதை சுத்தம் செய்தால், உங்கள் குழந்தையின் தலையில் அவை குறைந்திருப்பதை காண முடியும்.

3. நன்றாக வளைந்த சீப்பு

இதில் அனுபவம் உள்ள பெற்றோர்கள், இது போன்ற எண்ணிலடங்கா பொருள்களை வாங்கி வைத்திருப்பார்கள். இது முதல் முறை பெற்றோர் ஆனவர்களுக்காக, இது மிக நெருக்கமான பற்களை உடைய பேன் சிப்பு போன்றது. இதிலிருந்து எந்த ஒரு சிறிய ஒன்றும் தப்ப முடியாது. இதனாலேயே இது உங்கள் குழந்தையின் தொட்டில் முடியை சரி செய்வதில் உதவுகிறது. சிப்பின் பற்களில் சிறிது எண்ணெய் விட்டு பின் சீவுவதால், அதன் கடின தன்மை குறையும். நீங்கள் மிக மெதுவாக சீவ வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

4. குழந்தை ஷாம்பு

உங்கள் குழந்தையின் தலையை குறைந்த இரசாயனங்கள் கொண்ட குழந்தை ஷாம்பூவுடன் அடிக்கடி கழுவுங்கள், அதிக ஷாம்பு அவர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். குளியலுக்கு பின் இந்த திட்டுகள் மிக லேசாக தெரியும், நீங்கள் அப்போது அவற்றை சீப்பு அல்லது குழந்தைகளுக்கான தூரிகை (brush) கொண்டு நீக்கலாம்.

திட்டுகளை நீக்குவதை முடிந்த வரை தவிர்க்கவும். அப்படி நீக்குவதால் ஏற்படும் அடையாளங்கள் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தலாம். இந்த தொட்டில் முடி அதிக நாட்களுக்கு தொடர்ந்து இருந்தால், நீங்கள் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon