Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு இருப்பதற்கான 5 அறிகுறிகளும், அதற்கான சிகிச்சைகளும்

தொண்டைக்கட்டு என்பது சளி மற்றும் இருமலால், தொண்டை மற்றும் குரல்வளையில் ஏற்படும் வீக்கமாகும். உங்கள் குழந்தையின் தொண்டையில் வலி ஏற்படும் என்பதால், உணவு சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும், சத்தம் எழுப்புவதற்கும் மிகவும் சிரமப்படுவார்கள். தொண்டைக்கட்டு குளிர் காலத்தில் ஒரு வைரஸினால் ஏற்படுகிறது. இது குளிர் காலத்தில் தான் உங்கள் குழந்தையை அதிகமாக தாக்கும். இங்கே, தொண்டைக்கட்டு இருப்பதற்கான 5 அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் இது சரியவில்லை எனில் மருத்துவரை அணுகுவது நல்லது.

1 இருமல்

தொண்டைக்கட்டின் முக்கிய அறிகுறி தொடர் இருமலாகும். இது தொண்டையில் சிக்கியிருக்கும் பொருளை எடுப்பதற்கான ஒரு எதிர்வினையே ஆகும். தொண்டைக்கட்டு, தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி, தொடர் இருமலுக்கு வழிவகுக்கிறது.

2 தொண்டை வலி

தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தால் தொண்டைவலி ஏற்படும். இதனால் உணவை விழுங்க முடியாமல் குழந்தைகள் சிரமப்படுவார்கள். அவர்கள் எச்சில் விழுங்கினாலும் தொண்டை வலி ஏற்படும்.

3 மூச்சில் ஓசை

தொண்டைக்கட்டிற்கான மற்றொரு அறிகுறி, குழந்தைகள் மூச்சு விடும் பொழுது, அதிக சத்தத்தில் ஒலி ஏற்படும்.

4 காய்ச்சல்

உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது சிறிது நேரத்தில் குணமாகி விடும். தொண்டைக்கட்டிருந்தால் காய்ச்சல் வரும் என்றில்லை. ஆனால் காய்ச்சல் இருந்தால் தொண்டைக்கட்டிற்கான மற்ற அறிகுறிகளை கவனியுங்கள்.

5 கரகரப்பான குரல்

குரல் வளையில் ஏற்படும் வலியால் குழந்தையின் குரலில் மாற்றம் ஏற்படும். கரகரப்பான தடிமனான குரல் தொண்டைக்கட்டிற்கான அறிகுறியே. இத்துடன், அவர்கள் மூச்சுவிடும் பொழுது அதிகளவிலான சத்தம் கேட்கும்.

வீட்டுசிகிச்சைகள்

1. ஆவிபிடித்தல், உங்கள் குழந்தையின் மூக்கிலிருந்து சளியை வெளியேற்றும். மேலும், மூச்சுவிடுவதை எளிதாக்கும். தண்ணீரில் சிறிது தைலம் கூட சேர்த்துக்கொள்ளலாம். குழந்தை தூங்க போவதற்கு முன்பாக இதை செய்தால் தொண்டைக்கட்டு எளிதில் குணமாகும்.

2. உங்கள் குழந்தையின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினசரி பால் மற்றும் தண்ணீரின் அளவை அதிகரியுங்கள். உங்கள் குழந்தைக்கு வைரஸை வெளியேற்ற சக்தி தேவைப்படும்.

3. உங்கள் குழந்தையை போர்வையால் போர்த்தி, வெளியே அழைத்துசெல்லுங்கள். காரின் ஜன்னலை கீழே இறக்கி, குளிர் காற்றை சுவாசிக்க வையுங்கள். இதனால் மூச்சு பாதை சீரமைக்கப்படும்.

4. காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளியுங்கள். காய்ச்சல் குறைந்தாலே, உங்கள் குழந்தை சௌகரியமாக உணர்வார். காய்ச்சல் குறைந்தால் தொண்டைக்கட்டு குணமாகி வருகிறது என்று அர்த்தம்.   

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon