Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய ஐந்து தென்னிந்திய உணவுகள்

உங்கள் குழந்தை திட உணவுகள் உண்ணும் அளவிற்கு வளர்ந்துவிட்டால் அவர்களுக்கு எல்லாவிதமான உணவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் தென்னிந்திய அம்மாவாக இருந்தால் பிரபலமான தென்னிந்திய உணவுகளை கண்டிப்பாக கொடுக்க முயற்சிப்பீர்கள். எந்த உணவிலிருந்து தொடங்குவது, அது ஆரோக்கியமானதா என்ற பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும். எனவே ஆரோக்கியமான மற்றும் குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய சில உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

குறிப்பு: குழந்தைக்கான உணவில் அதிகளவு மசாலாப்பொருட்களை சேர்க்கக்கூடாது.

1. இட்லி

இது தென்னிந்தியாவில் மிகவும் பிடித்த மற்றும் பொதுவாக சாப்பிடும் உணவில் ஒன்றாகும். இதனை காலை, மதியம், இரவு என அனைத்து நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம். எனவே கொழுப்புகள் இல்லாத ஆரோக்கியமான இது போன்ற உணவுகளை கொண்டே உங்கள் குழந்தையின் திட உணவை தொடங்கலாம். இது மிகவும் மிருதுவானது, எளிதில் செரிமானமாக கூடியது. மேலும், இதில் பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்தும் குழந்தைக்கு கொடுக்கலாம்.

2. தயிர் சாதம்

தயிர், குழந்தைக்கு மிகசிறந்த உணவாகும். குழந்தைக்கு வயிறு சரி இல்லாதபோது இது செரிமானத்தை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். காய்ச்சலின் ஆரம்ப கட்டங்களில் இது புரோபயாடிக் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான சிறந்த இயற்கை மாற்று மற்றும் பிற உணவிலிருந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. எனவே உங்கள் குழந்தைக்கு சுவையான தயிர் சாதத்தை கொடுங்கள்.

3. உப்புமா

உப்புமா ஆரோக்கியமான அதேசமயம் அனைவரும் சாப்பிடக்கூடிய தென்னிந்திய உணவு வகையாகும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு அதிகளவு இரும்பு சத்துக்களை வழங்கக்கூடியது. இதனுடன் காய்கறிகளை சேர்த்து உங்கள் குழந்தைக்கு தருவது அதிகளவு ஆரோக்கியத்தை வழங்கும்.

4. பொங்கல்

இது இனிப்பு மற்றும் கார சுவைகளில் செய்யக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இது எளிதில் தயார்செய்ய கூடிய சுவையான மற்றும் எளிதல் செரிக்க கூடிய உணவாகும். பொங்கலில் புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.

5. புட்டு

இந்த பாரம்பரிய தென்னிந்திய உணவை சுலபமாக செய்யலாம். வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள், பட்டாணி, பழங்கள் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் குழந்தைக்கு உணவாக கொடுக்கலாம். இது வேகவைக்கப்பட்ட உணவு என்பதால், இது எண்ணெயைக் கொண்டிருக்கவில்லை, மேலும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon