Link copied!
Sign in / Sign up
24
Shares

குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத 10 உணவுகள்

குழந்தையின் முதல் வருட வாழ்வில் அவர்களை திட உணவு சாப்பிட வைப்பது என்பது மறக்க முடியாத நாளாக இருக்கும். ஆனால், பெற்றோர் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் அனைத்து குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும் என்று சொல்ல முடியாது. சில உணவுகளை அவர்களின் ஒரு வயதிற்கு முன் கொடுக்க கூடாது. இங்கு குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத 10 உணவுகளை பார்க்கலாம். 

1 பால்

பால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தையின் செரிமான மண்டலத்தால் எளிதில் செரிக்க முடியாது. மேலும் இதில் குழந்தையின் சிறுநீரகங்களுக்கு சேதம் விளைவிக்கும் புரதங்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. சில குழந்தைகளுக்கு லாக்டோஸ் சகிப்பு தன்மை இல்லாமல் இருக்கும் அல்லது குழந்தைகளுக்கு புரத ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்பட்டு வயிற்று போக்கை ஏற்படுத்தலாம். குழந்தையின் முதல் வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது.

2 சிட்ரஸ் பழங்கள்

ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவை புரோட்டீன்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை குழந்தைகளின் உடலால் எளிதாக செரிக்க முடியாது. திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவை அதிக அமிலத் தன்மை கொண்டவை. இவை குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். நீங்கள் குழந்தைகளுக்கு பழங்களைக் கொடுக்கும் போது மசித்தோ, பழச்சாறுகளாகவோ அல்லது மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுக்க வேண்டும்.

3 தேன்

தேனில் அதிக அளவில் பாக்டீரியா நிறைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மையை தோற்றுவிக்கும். இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மலச்சிக்கல், குழந்தைகளின் தொடர்ச்சியான அழுகை மற்றும் பால் குடிப்பதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறியாகும். மற்ற திரவ இனிப்பூட்டிகள், மேப்பிள் சிரப் போன்றவை இந்த ஆபத்தை அளிக்கின்றன. இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டும்.

4 வேர்க்கடலை வெண்ணெய்(பியாநட் பட்டர்)

குழந்தைகளுக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்துவதை போல் வேர்க்கடலை வெண்ணையும் அலர்ஜியை ஏற்படுத்தும். நல்ல அடர்த்தியான வேர்க்கடலை வெண்ணெய் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும் என்பதை பெரும்பாலான பெற்றோர் உணர்வதில்லை. முடிந்தவரை இதை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் வளர்ந்த பின் கொடுக்கும் போது, பிரட்டுடன் வேர்க்கடலை வெண்ணையை மெல்லியதாக சேர்த்து கொடுக்கவும்.

5 சில காய்கறிகள்

கீரைகள், கிழங்குகள் மற்றும் வேர்க்காய்கறிகள் போன்றவற்றில் நைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். குழந்தைகளின் வயிற்றில் நைட்ரேட்டை செரிக்க தேவையான அமிலங்களின் சுரப்பு இருக்காது, இது இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கட்டுப்படுத்தும் திறனை தடுக்கிறது. ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பது, ப்ளூ பேபி நோய்க்குறி வழிவகுக்கலாம். முடிந்தவரை அதிக வைட்டமின்கள் மற்றும் குறைவான நைட்ரேட் நிறைந்த காய்களை கொடுங்கள்.

6 உப்பு

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு போதுமானது. தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா பாலிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு உப்பு கிடைக்கிறது. அதிக அளவு சோடியத்தை செயல்படுத்தும் அளவிற்கு குழந்தையின் சிறுநீரகம் வளர்ச்சி அடைந்திருக்காது. முடிந்த வரை உப்பை பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்கும். எனவே அவற்றை குழந்தைகளுக்கு தவிர்ப்பது சிறந்தது.

7 நட்ஸ்

குழந்தைகளுக்கு நட்ஸ்ஸை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கடுமையான மூச்சு திணறலை ஏற்படுத்தி, அதனால் இறப்பையும் ஏற்படுத்தலாம். குழந்தையின் மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய் சிறியதாக இருப்பதால், அவை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

8 சாக்லேட்

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே அதிக பிரியம் தான். ஆனால், அதில் இருக்கும் காபின் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இவை பால் பொருட்களால் செய்யப்பட்டிருப்பதால், குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாக்லேடின் பெரிய துண்டுகள் குழந்தைகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும்.

9 பாப்கார்ன்

பாப்கார்ன் ஒரு சுவையான, மொறுமொறுப்பான மற்றும் ஆரோக்கியமான அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் அது குழந்தைகளுக்கு கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ஒவ்வொரு பாப்கார்னின் மையப்பகுதியும், வெளிப்பகுதி போல் உடைக்க முடியாதபடி கடினமானதாக இருக்கும். 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு பாப்கார்ன் கொடுக்க கூடாது.

10 முட்டை

முட்டை காலை உணவிற்கான சிறந்த விருப்ப உணவாக இருக்கலாம். பெரும்பாலும் முட்டையின் வெள்ளைக்கரு குழந்தைகளுக்கு அதிக அலர்ஜி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க துவங்கும் போது, முட்டையின் மஞ்சள் கருவை தனியே பிரித்து நன்கு வேக வைத்து கொடுக்கவும். இதன் மூலம் குழந்தைகளுக்கு எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என அறியலாம்.

பொறுப்புத் துறப்பு :

உணவு, மருத்துவம் அல்லது உடற்பயிற்சி தொடர்பான எங்கள் வலைப்பதிவுகளில் பரிந்துரைக்கப்படும் எதையும் முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon