Link copied!
Sign in / Sign up
591
Shares

இந்த 10 உணவு பொருளை எக்காரணம் கொண்டும் குழந்தை கண்ணில் காட்டாதீர்கள்!

உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று என்றாலும், எதை எப்போது உண்ண வேண்டும் எனும் வரை முறையும் சேர்ந்தே உள்ளது. உங்கள் குழந்தைகள் உங்கள் தட்டில் இருந்து உணவுகளை உண்ண முயற்சிக்கலாம், நீங்களும் அவர்களுக்கு புதிதாக ஆரோக்கியமானது கொடுக்க நினைக்கலாம். அப்படி குழந்தைகளுக்கு நீங்கள் எந்த வயதில் எந்த உணவை கொடுக்கலாம் என்பதையும் அறிந்து கொண்டு கொடுத்தால் அவசியமாகிறது. அதுபோல குழந்தைகள் வயதுக்கேற்ப நீங்க தவிர்க்க வேண்டிய 10 உணவு பொருட்களை பார்க்கலாம்.

1 மாட்டு பால்

குழந்தைக்கு தாய் பாலே சிறந்தது என்றாலும், ஆறு மாத காலத்திற்கு பின் மாட்டு பால் கொடுக்க துவங்கிவிடுகிறார்கள். மாட்டு பாலில் உள்ள லாக்டோஸ் மற்றும் பால் புரத பொருட்கள் குழந்தைக்கு அலர்ஜியையோ, வயிற்று உபாதைகளையோ ஏற்படுத்த கூடும். மேலும் பாலில் உள்ள கனிமங்கள், புரதம், மற்றும் சோடியம் போன்றவற்றை எளிதில் குழந்தையின் உடலால் ஜீரணிக்காது.

குறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.

2 கொட்டைகள் மற்றும் விதைகள் (நட்ஸ்)

அனைத்து விதமான நட்ஸ்களையும் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மென்று உண்ண தெரியாது, அவர்கள் அதை அப்படியே விழுங்கிவிடுவார்கள். குறிப்பாக வேர்க்கடலையை குழந்தைக்கு கொடுக்கும் முன் மருத்துவரிடம் ஒப்புதல் பெறுவது அவசியம். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்  கூடும்.

குறிப்பு : நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

3 சிட்ரஸ் அல்லது அமிலங்கள் நிறைந்த பழங்கள்

இவை அலர்ஜியை ஏற்படுத்த கூடியவை அல்ல. ஆனால் அசிடிட்டியின் காரணமாக சில தடிப்புகள் மற்றும் செரிமான பிரச்னையை ஏற்படுத்தலாம். எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் அன்னாசி பழங்களை சாறுகளாகவோ அல்லது மசித்தோ கொடுக்கலாம். ஆனால் துண்டுகளாக கொடுப்பதை தவிர்க்கவும். தக்காளி பழம் சிட்ரஸ் அமிலம் கொண்டதல்ல. ஆனால் அது அசிடிட்டியை ஏற்படுத்தும்.

குறிப்பு : ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

4 ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி ஒரு சிறந்த பழம் என்றாலும், அது குழந்தைகளுக்கு உகந்ததல்ல. இதில் உள்ள அதிகப்படியான புரதம் குழந்தைகளுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தலாம். இதை சமைக்கும் போதும் உயர் வெப்பநிலையின் காரணமாக புரத தன்மையை நடுநிலைப்படுத்துவதாலும் அலர்ஜியியை ஏற்படுத்தும்.

குறிப்பு : ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

5 தேன்

குளோஸ்டிரீடியம் போடிலியம் எனும் பொருள் நம் உடலில் இயற்கையாகவே உயிரின வித்துக்களை உருவாகும். ஆனால் தேனில் உள்ள பாக்டீரியாக்கள் அவை உருவாவதை தடுக்கலாம். பெரியவர்களின் குடல் பாதை அதை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் குழந்தைகள் குடல் பாதை வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதால் பாக்டீரியாக்களை தடுக்க முடியாமல் நச்சு தன்மையை ஏற்படுத்தும்.

குறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.

6 முட்டை

வளர்ந்த குழந்தைகளுக்கு வேக வைத்த உணவுகளையும் வேக வைத்த முழு முட்டைகளைக் கொடுக்கலாம் என பல குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு நன்றாக வேக வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அவை சால்மோனெல்லா நோய்த்தாக்கம் மற்றும் வயிற்று போக்கை குழந்தைக்கு ஏற்படுத்தும்.

குறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.

7 கடினமான பச்சை காய்கறிகள்

கேரட், பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்ட பழங்கள் மற்றும் வட்ட வடிவிலான திராட்சை, ப்ளம்ஸ் போன்ற பழங்கள் மிக ஆபத்தானவை. கேரட், வெள்ளரிகள், காலிஃபிளவர் அல்லது டைஸ் போன்ற காய்கறிகள் சமைத்து மென்மையாக்கப்பட்டு மற்றும் சிறிய துண்டுகளாக்கி குழந்தைக்கு கொடுக்கவும். பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குறிப்பு : ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

8 மீன்

இறால், நண்டு இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். இவைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

குறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.

9 சர்க்கரை

சர்க்கரை உங்கள் குழந்தையின் உடலில் கட்டாயம் சேர்க்க கூடாத உணவு. குறைவான அளவில் வேண்டுமானால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். அதிகப்படியான சர்க்கரை பற்சிதைவை ஏற்படுத்தும். வேண்டுமானால் உங்கள் குழந்தையின் உணவில் இனிப்பு சுவை நிறைந்த பழங்களை சேர்த்து கொடுக்கலாம்.

குறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.

10 ஒட்டும் உணவு

ஓட்டும் உணவு பொருட்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்துபவை. ஜாம், ஜவ்மிட்டாய், அல்வா மற்றும் சில ஒட்டும் தன்மையிலான உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். அவை உங்கள் குழந்தையின் தொண்டையில் சிக்கி கொள்ளும்.

குறிப்பு : இரண்டு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.

நீங்கள் இந்த பத்து உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து கொண்டிருந்தால், உடனடியாக நிறுத்திவிடுங்கள். உங்கள் குழந்தை வளர்ந்ததும் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். பத்து மாதம் சுமந்து பெற்ற மலர்களை, தெரியாமல் இது போன்ற பத்து உணவுகளை கொடுத்து வாட செய்து விடாதீர்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
33%
Wow!
67%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon