Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் கொடுப்பதால் காணப்படக்கூடிய நன்மைகள்...

DETOX DIET..!!

ஒரு நாள் முழுதும் அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்குப் பதிலாக பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்வது, காய்கறிகளை வேக வைத்துச் சாப்பிடுவது தான் detox diet. இதை கடைபிடித்தால், முகப்பொலிவுடனும், இளமையாகவும், சரியான உடல் எடையுடனும் இருக்கலாம். மேலும் காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றிவிடுவதே அதற்கு காரணம். 

இந்த diet கட்டுப்பாட்டு முறையை 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பது தான் ஆரோக்கியமானதாக இருக்கும்; அதுவே தகுந்தது. ஆனால் தற்போது பல பெற்றோர்கள், தங்களின் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும், பள்ளி செல்லும் வயது குழந்தைகளுக்கும், அவர்களின் உடல் எடையைக் குறைக்க எண்ணி, இந்த detox diet - ஐ பின்பற்ற செய்கிறார்கள்.

சரியான முறையல்ல..!

குழந்தைகளுக்கு detox diet கொடுப்பது சரியான முறை அல்ல; மனிதர்களின் உடலுக்கு புரோட்டின், கால்சியம், விட்டமின் மற்றும் தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகித அளவில் அவசியம் தேவை. மேலும் குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இச்சத்துக்கள் கட்டாயமாக தேவை. ஆகவே, மழலைகளுக்கு வாரத்தில் ஒரு நாளன்றோ, இல்லையேல் ஒரு நாளின் ஒரு வேளையிலோ அல்லது பல வேளைகளுக்கோ detox diet கொடுக்கும் போது, அவர்களுக்கு மற்ற அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே, detox diet குழந்தைகளுக்கு வேண்டாம்; இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும்..!

சரியான வழிகள்..!

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை மற்றும் மதிய உணவுகளில் தினமும் ஏதேனும் ஒருவகைப் பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிட அளித்தாலே போதுமானது. மேலும், மாலையில் காய்கறி அல்லது மாமிச சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் பழங்களையும் அளிக்கலாம்.

குழந்தைகளின் எடையை குறைக்க, detox diet சரியான வழியல்ல. குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்கவும். மேலும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பது மிகவும் நல்லது. பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள் என்றாலே முகம் சுளிக்கும் மழலைகளுக்கு சிறு வயதிலேயே diet என்ற பெயரில் உணவுகளை ஒருவித கட்டாயத்துடன் சாப்பிட அளித்து, அவர்கள் உணவினையே முற்றிலும் வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்.., பெற்றோர்களே!

குழந்தைகள் அணைத்து வகையான உணவுகளையும் உண்ணுமாறு செய்யுங்கள்; அதனால், அவர்கள் எடை கூடினாலும், விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகள் மூலம் உடல் எடை தானாகக் குறையும். மேலும் குழந்தைகள் வளர வளர அவர்களின் உயரத்திலும், உடல் எடையிலும் பல மாற்றங்கள் நிகழும்..! எனவே, குழந்தைகளை மழலைப்பருவத்தை சந்தோஷமாக கொண்டாட அனுமதியுங்கள்..!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon