Link copied!
Sign in / Sign up
1
Shares

குழந்தைகளுக்கு ஏற்படும் மலவாய் அரிப்பு..! தீர்வு உள்ளே!!

குழந்தைகளுக்கு மலவாயில் அரிப்பெடுத்தால், முக்கியமாக இரவில் அரிப்பு ஏற்படுவதற்கு, தானைப் புழு எனும் Thread worm தான் ஒரு காரணமாகும். மலவாயில் உண்டாகும் அரிப்பை, மருத்துவத்தில் ப்ருரிடஸ் அணி (Pruritus ani) என்பார்கள். குழந்தைகளுக்கு கடுமையான அரிப்பு எந்த நேரத்திலும் வரலாம்; எனினும் மலம் கழித்த பின்னும், இரவில் படுக்கைக்குச் செல்லும் நேரங்களிலும் அதிமிருக்கும்; குழந்தைகளில் இப்பிரச்சனையைக் காண்பது அதிகம். இப்பிரச்சனை 40-60 வயதுள்ளவர்களிலும் காணப்படலாம். இந்த மலவாய் அரிப்பு ஏற்படுவதற்கு காரணங்கள் என்னென்ன, தடுப்பது எப்படி என இப்பதிப்பில் படித்தறிவோம்..!

காரணங்கள் 

மலவாய் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு; எக்சிமா, சோராசிஸ், லைக்கன் பிளேனஸ் போன்ற நோய்கள் உடலின் ஏனைய இடங்களில் ஏற்படுவது போலவே மலவாயிலும் ஏற்படலாம்.

இதைத்தவிர ஒவ்வாமை, மிகக்கடுமையாக வியர்ப்பது, அடிக்கடி மலங்கழிப்பதால், மலவாயில் அதிக உரோமம் மற்றும் அதிக ஈரம் இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால், சோப்புகளை மாற்றி அல்லது தவறான சோப் பயன்பாட்டால், மலவாய் வீங்குதல், தடிப்புகள் உண்டாதல், மலம் இறுக்கமாக வெளியேறுதல், சிலவகை உடலிற்கு ஒவ்வாத உணவுகள் போன்றவை மலவாய் அரிப்பிற்கு காரணமாகலாம்.

இதைத்தடுக்க செய்ய வேண்டியவை..

1. ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகள், கிரீம்கள், பொருட்களை தவிர்ப்பது

2. மலவாயினை, சுத்தமான நீரை பயன்படுத்தி, நன்கு கழுவி சுத்தமாக வைத்திருத்தல் 

3. தினசரி குளியல், குளித்தபின் ஈரத்தை மெண்மையான துண்டால் அகற்றுவது

4. தினமும் சுத்தமான தூய உள்ளாடைகள் அணிவது; மலவாயைக் கழுவினால், ஈரத்தை துடைத்த பின் உள்ளாடையை அணியவும்

5. மலவாயில் அதிகம் முடியில்லாமல் பார்த்துக் கொள்ளல் 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon