Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகளுக்கு விருப்பமான 5 பழ கூழ் வகைகள்

குழந்தைகள் 4 முதல் 6 மாதங்களை அடைந்த உடன், பாலை தவிர மற்ற உணவுகளில் ஆர்வம் செலுத்துவார்கள். குழந்தைகளுக்கு தினசரி கொடுக்கும் அளவிற்கு உணவு கொடுத்தும் திருப்தி அடையாதவராக உங்களது உணவையும் கேட்பார்கள். இங்கு குழந்தைகளுக்கு விருப்பமான 5 பழக்கூழ் வகைகளை பார்க்கலாம்.

1 ராஸ்பெர்ரி (புற்றுப்பழம்) மற்றும் வாழைப்பழ கூழ்

ராஸ்பெர்ரி மற்றும் வாழை கலந்த கலவையை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். இதை உங்கள் பெரிய குழந்தை மற்றும் சிறிய குழந்தைக்கு கொடுக்க சிறந்த உணவு. இந்த பழக் கூழின் மென்மை மற்றும் இயற்கையாகவே இருக்கும் இனிப்பு சுவை உங்கள் குழந்தையை கவர்ந்துவிடும்.

வயது வரம்பு : 6 முதல் 9 மாதங்கள்

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - 1

ராஸ்பெர்ரி - ½ கப் (கழுவியது)

செய்முறை :

மேற்கூறிய இரண்டு பொருட்களை ஒன்றாக தேவையான பதத்தில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். இதை கூழ் போன்றோ அல்லது மசியல் போன்றோ செய்தும் கொடுக்கலாம்.

2 ஆப்பிள் கூழ்

ஆப்பிள் குழந்தையின் உணவில் எளிதில் சேர்க்க முடிவதால், சிறந்த பழமாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆப்பிள் வாங்கும் போது இனிப்பு சுவையுடைய, அதிக இரசாயன கலப்பில்லாத ஆப்பிளை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.

வயது வரம்பு : 4 முதல் 6 மாதங்கள்

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - 3 (தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)

தண்ணீர் - ½ கப்

செய்முறை :

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஆப்பிள் துண்டுகளை போட்டு 12 நிமிடங்கள் வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் அப்படியே அரைத்து கொள்ளவும். உங்களுக்கு வேண்டுமானால், மேலும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.

3 வாழைப்பழ கூழ்

வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. அவை குழந்தையின் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் சிறந்த பழங்கள் என்று கருதப்படுகின்றன. இவை வயிற்று உபாதை மற்றும் வயிற்றுப்போக்குக்கு எதிராக போராட உதவுகிறது.

வயது வரம்பு : 4 முதல் 6 மாதங்கள்

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - ½ (நன்கு பழுத்து தோல் நீக்கியது)

தண்ணீர் / தாய்ப்பால் - 1 தேக்கரண்டி

செய்முறை :

வாழைப்பழத்தை சிறிது நீர் அல்லது தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்தோ அல்லது மசித்தோ குழந்தைக்கு கொடுக்கலாம். நீங்கள் குழந்தைக்கு திரவ உணவாகவோ அல்லது திட உணவாகவோ கொடுக்கலாம்.

4 பேரிக்காய் கூழ்

இதில் நிறைந்திருக்கும் இனிப்பு சுவை மற்றும் அதிக நார்ச்சத்து பெரும்பாலானவர்கள் தவிர்க்கும் படி உள்ளது. ஆனால், இது சிலருக்கு சுவை நிறைந்த விருப்ப உணவாக இருக்கிறது.

வயது வரம்பு : 4 முதல் 6 மாதங்கள்

தேவையான பொருட்கள் :

பேரிக்காய் - 1 (நன்கு பழுத்து தோல் நீக்கியது)

தண்ணீர் / தாய்ப்பால் - 1 தேக்கரண்டி

செய்முறை :

உங்களுக்கு வேண்டிய பதத்தில் பேரிக்காயை தண்ணீர் அல்லது தாய்ப்பால் சேர்த்து மிருதுவாக அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

5 சர்க்கரைவள்ளி கிழங்கு கூழ்

சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு.

வயது வரம்பு : 6 மாதங்களுக்கு பிறகு

தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 அல்லது 2 (தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)

தண்ணீர் / தாய்ப்பால் - 1 தேக்கரண்டி

செய்முறை :

துண்டுகளாக நறுக்கப்பட்ட சர்க்கரைவள்ளி கிழங்கை நீராவியில் 20-30 நிமிடங்கள் வேக வைக்கவும். பின் அதனுடன் நீர் அல்லது தாய்ப்பால் சேர்த்து தேவையான பதத்தில் அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon