Link copied!
Sign in / Sign up
7
Shares

குழந்தைகளுக்கு விருப்பமான பாதாம் பால் - செய்முறை வீடியோ

குழந்தைகளுக்கு வெறும் பாலாக குடிக்க கொடுத்தால் அதை விரும்ப மாட்டார்கள். விளம்பரங்களில் வருவதை நம்பி நாமும் பல சத்து பானங்களை குழந்தைகளுக்கு கொடுப்போம். குழந்தைகளும் விரும்புவார்கள். அதிலும் பாதாம்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படக் கூடிய ஒன்று. நாம் கடைகளில் வாங்கி வரும் பாதாம் பால் உடனடி பொடிகளை பயன்படுத்தி தயாரிப்போம். ஆனால், அதில் சுவை, வண்ணம் மற்றும் மணத்திற்காக பல இரசாயனங்கள் சேர்க்கப்படும். அவை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். இவற்றை கொடுப்பதற்கு பதில் வீட்டில் எப்படி இரசாயன கலப்பில்லாத பாதாம்பால் தயாரிக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாதாம் - 35 முதல் 40 வரை

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - ½ கப் (சுவைக்கேற்ப)

குங்குமப்பூ - 1 தேக்கரண்டி குங்குமப்பூ

ஏலக்காய் - 3

பச்சை கற்பூரம் (சமையல்) - மிளகு அளவில்

செய்முறை

1 பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

2 பாதாமை அரைமணி நேரம் சுடுநீரிலோ அல்லது தண்ணீரிலோ ஊறவைத்து தோலை நீக்கி கொள்ளவும்.

3 ஏலக்காயின் தோலை நீக்கி விட்டு அதன் விதை, பச்சை கற்பூரம் ஆகியவற்றுடன் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அரைத்து மீதமிருக்கும் சர்க்கரையுடன் கலந்து கொள்ளுங்கள்.

4 குங்குமப்பூவில் கொதிக்கும் பாலை இரண்டு தேக்கரண்டி ஊற்றி ஊறவைக்கவும்.

5 தோல் நீக்கிய பாதாமில், ஊறவைத்த குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

6 அடுப்பில் வைத்த பால் 600 - 700 மிலி ஆகும் வரை நன்கு சுண்ட காய்ச்சவும். பின் அதனுடன் அரைத்த கலவையை சேர்த்து கொதி வந்தவுடன், சர்க்கரை சேர்த்து கிளறவும்.

7 இதை சூடாகவோ அல்லது குளிச்சியாகவோ பரிமாறலாம்.

8 நறுக்கிய பிஸ்தா பருப்புடன், சிறிது குங்குமப்பூ சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon