Link copied!
Sign in / Sign up
21
Shares

குழந்தைகளுக்கு தேவைப்படக் கூடிய 7 தயாரிப்புகள்

ஷாப்பிங் செய்ய விருப்பாதவர்கள் யாரும் இல்லை. கடைகளுக்கு சென்று மணிக்கணக்கில் தேடி வாங்கும் காலம் மாறி, அலைபேசி மூலமாக செய்யும் ஷாப்பிங் வரை உலகம் முன்னேறி இருக்கிறது. நீங்கள் எதற்காக ஷாப்பிங் செய்யாவிட்டாலும், உங்கள் குழந்தை பிறந்தவுடன் அவர்களின் தேவைக்காக கட்டாயம் ஷாப்பிங் செய்து தான் ஆக வேண்டும். இது சில நேரங்களில் உங்களுக்கு கடினமான ஒன்றாக கூட தோன்றலாம். நீங்கள் கடினமாக முயற்சி செய்தால், நீங்கள் பெற்றெடுத்த செல்வத்திற்கான அனைத்தையும் ஷாப்பிங்களையும் செய்யலாம். ஒரு சிறிய குழந்தையை கவனித்துக் கொள்வதற்கான முயற்சி, ஒரு மனிதனை கவனித்து கொள்ளும் அளவிற்கு நேர்மாறாக இருக்கும். உங்கள் குழந்தைக்காக கட்டாயம் நீங்கள் ஷாப்பிங் செய்திருக்க வேண்டிய தயாரிப்புகளை இங்கு பார்க்கலாம்.   

1 டயபர் அரிப்பு மருந்து(oinment)

இந்த மருந்து உங்கள் குழந்தையை அரிப்பிலிருந்து விடுவிப்பதை நீங்கள் உணர்வீர்கள். குழந்தையின் டயபர் ஈரமடைந்து அதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் குழந்தையின் மென்மையான சருமத்தில் அலர்ஜி மற்றும் எரிச்சலை ஏற்படுத்த வழிவகுக்கும். இந்த மருந்து உங்கள் குழந்தையின் அரிப்பு மற்றும் அலர்ஜியை போக்கி, நல்ல உறக்கத்தை கொடுக்கும். இது டயபரில் ஒரு தடையாக செயல்பட்டு, ஈரப்பதம் உங்கள் குழந்தையின் தோலை அடைவதை தவிர்க்கிறது. இது குழந்தையை உற்சாகமாக வைக்கவும், குழந்தையின் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்கவும் செய்கிறது.

2 ஈரப்பதம் - Humidifier

குழந்தைகள் சளி மற்றும் பிற நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் குழந்தைக்கு சளி பிடித்திருக்கும் போது, அவர்களது மூக்கு மிக சிறியதாக இருப்பதால் அவற்றை வெளியேற்ற முடியாமல் மூச்சு திணறல் ஏற்படும். மருந்துகளில் உள்ள இரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், உங்கள் குழந்தை மருந்தை எப்பொழுதும் அறிவுறுத்தபடுவதில்லை. இந்த விஷயத்தில், ஈரப்பதமூட்டி உங்கள் குழந்தையின் ஆறுதலுக்கு அத்தியாவசியமாக இருக்க முடியும். உங்கள் குழந்தையின் சளி நிரம்பிய மூக்கை சரி செய்து, சுவாசத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

3 தொட்டில்

நீங்கள் குழந்தைக்கு தாயாக இருக்கும் போது, அனைத்தையும் உங்கள் வழிகளில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் உங்கள் அருகில் குழந்தை உறங்கும் படி செய்யுங்கள். உங்களுக்கும் ஒரு இடம், நல்ல உறக்கம் என்பது அவசியமாக இருக்கும். இதற்கான சிறந்த வழிதான் குழந்தைகளின் தொட்டில். நீங்கள் உங்கள் படுக்கையுடன், இதை இணைக்கலாம் மற்றும் அவருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளாமல் உங்கள் குழந்தையுடன் உங்கள் சொந்த அறையில் தூங்கலாம். இரவில் உங்கள் குழந்தை அழுதாலும், இதன் மூலம் எழாமல் சமாதான படுத்த முடியும்.

4 நீர்புகாத தாள்கள்

நீர்புகாத தாள்களை உங்கள் குழந்தையின் படுக்கை விரிப்புகளில் பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் அல்லது ரப்பர் ஷீட்களை குழந்தையின் படுக்கைக்கு மேலே அல்லது கீழே பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் படுக்கையை ஈரமாக்குவதை தவிர்க்கும். பிளாஸ்டிக் / ரப்பர் தாள்கள் துடைப்பது, படுக்கையறைகளை சுத்தம் செய்வது, அழுக்கடைந்த மெத்தையை சுத்தம் செய்வதைவிட மிகவும் எளிது. மெத்தை பாதுகாக்க தேவையானவை விரும்பும் தரத்தில் எளிதில் கிடைத்து விடும்.

5 துணி (Bibs)

துணி என்பது சாதாரணமான ஒன்று என்று நீங்கள் நினைக்கலாம். இது கட்டாயம் குழந்தைக்காக வைத்திருக்க வேண்டிய அவசியமான ஒன்று. குழந்தைக்கு உணவளிக்கும் போதும், பாலூட்டும் போதும் இது தேவைப்படுகிறது. இவற்றை அதிக அளவில் வாங்கி கொள்ளுங்கள். இவற்றின் தேவையை அறிந்தால், அவை கட்டாயம் உங்களுக்கு தேவைப்பட துவங்கும். விரைவு உலரக் கூடியது அல்லது நீர்ப்புகா பைகள் உங்கள் பாதுகாப்பான விருப்பமாக இருக்கும்.

6 சுவரில் ஒட்ட கூடியவை

உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைக்க, இவற்றை பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலைக்கு பின், உங்கள் குழந்தை தவழ துவங்கி விடும். இது போன்ற சமயங்களில் சில முக்கியமான பொருட்கள் சேதமடையலாம். சில பொருட்கள் உங்கள் குழந்தைக்கு தீங்கிழைக்க கூடும். அந்த தேவையற்ற விபத்துக்கள் தடுக்க இது உங்கள் முற்றிலும் அவசியம். ஆர்வமிக்க சிறிய குழந்தைக்கு பாதுகாப்பை கொடுக்கும். நீங்கள் பயன்படுத்தும் அக்ரேஜ் பயமற்றது மற்றும் நீடித்தது என்பதை உறுதிப்படுத்தவும்.

7 மார்பக பம்ப்

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இது அவசியமான ஒன்று. உங்கள் குழந்தைக்கு தேவையான பால் சுரக்கும் போது, தாயின் உணவின் மூலம் பெறப்படும் தாய்ப்பாலில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் குழந்தைக்கு தேவையானவற்றை அளிக்கும். இது நேரடியாக உங்கள் குழந்தைக்கு பாலூட்ட முடியாத போது, மிகவும் உதவிய இருக்கும்.

இந்த சில பொருட்கள் உங்கள் குழந்தைக்கு எளிதாகவும் மென்மையாகவும் இருக்கும் அனுபவத்தை ஒரு நீண்ட காலத்திற்கு கொடுக்கும், மேலும் முடிந்தவரை சில நம்மைகளை கொண்டிருப்பதை உறுதி செய்யவும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon