Link copied!
Sign in / Sign up
13
Shares

குழந்தைகளுக்கு சக்தியளிக்கும் ஒரு அற்புத கூழ்..!

குழந்தைகளுக்கு ஒரே வகையான கூழ் அல்லது கஞ்சி வகைகளை கொடுத்தால், அவர்களுக்கே அது போர் அடித்துவிடும்; மேலும் குழந்தைகள் அனைத்துவகை சத்துக்களும் கிடைக்கப்பெறுவதை தாய்மாரான நீங்கள் உறுதி செய்தல் வேண்டும். குழந்தைகளுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் இரும்புச்சத்து, கால்ஷியம் போன்றவை, அவர்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான சத்துக்களாகும். இந்த அனைத்துச் சத்துக்களும் அடங்கிய, குழந்தைகளுக்கான ஒரு முக்கிய உணவு குறித்து இப்பதிப்பில் காண்போம்..!

தேவையானவை..

வேர்க்கடலை - 1 கப், வாழைப்பழம் - 2, பனை வெல்லம் - 1 கப்

செய்முறை..

1. 6 மணி நேரம் வேர்க்கடலையை ஊற வைத்துக் கொள்ளவும் 

2. ஊற வைத்த கடலையை, நன்றாகக் கழுவி அதனுடன் வாழைப்பழம், பனை வெல்லம் சேர்த்து மூன்றினையும் நீர் சேர்க்காது, நன்றாக அரைத்தெடுத்தால், அவ்வளவுதான் நிலக்கடலை கூழ் ரெடி 

இக்கூழினை குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்டால், அது ஐஸ்கிரீம் போன்று இருக்கும்; ஆகையால், குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்; சுவையான, சத்து நிறைந்த உணவான, இந்தக் கூழினைக் காலைநேர உணவாகவும் எடுத்து கொள்ளலாம்; இது உடலுக்கு சக்தி அளிப்பதுடன், புத்துணர்ச்சியையும் தரும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon