Link copied!
Sign in / Sign up
17
Shares

குழந்தைகளுக்கு பிடித்த சமோசா செய்வது எப்படி??

தாய்மார்களே! ஒவ்வொருநாளும் உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவினை செய்து மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே சமையல் புரிவீர். சில நேரங்களில் என்ன சமையல் செய்தாலும் அதை குழந்தை விரும்பி உண்ணாமல் அப்படியே வைத்துவிடும். நீங்கள் சமைக்கும் போது குழந்தையையும் சமையலில் ஈடுபடுத்துங்கள், இதனால், குழந்தையால் உணவு உருவாகும் விதம் மற்றும் அதன்பின் ஒளிந்திருக்கும் உழைப்பினை உணர முடியும்..!   

இந்த பதிப்பில் குழந்தைகளுக்கு பிடித்த சமோசா செய்வது எப்படி என படித்தறிவோம்..! மேலும் சமோசா குறித்த இனிய காணொளியைக் கண்டு மகிழ்வோம்..!

தேவையானவை 

கோதுமை மாவு - 200 கிராம், வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, சீரகம் - ஒரு தேக்கரண்டி, மிளகாய்த் தூள் - தேவைக்கேற்றவாறு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, ஊறவைத்த பட்டாணி/சுண்டல்.

செய்முறை

1. உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலினை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

2. வெங்காயத்தை மிகச்சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

3. பட்டாணி/சுண்டலை வேகவைத்துக் கொள்ளவும் 

4. வாணலியில் எண்ணெய் சேர்த்து, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

5. பின் உருளைக்கிழங்கை சேர்த்து மிளகாய்த்தூள், வேகவைத்த பட்டாணி/சுண்டல் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மசாலாவை தயார் செய்து வைக்கவும்

6. கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்

7. வெட்டிய துண்டில் ஒன்றையெடுத்து, அதன் ஒருபாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக்கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்; அதன் உள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்

8. இதேபோல் மீதம் உள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்

9. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏற்கனவே செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்

Video Credits: Shinchan Parthabangal Facebook Page

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon