Link copied!
Sign in / Sign up
17
Shares

குழந்தைகளுக்கு முன்னால் பெற்றோர் செய்யக்கூடாத 6 விஷயங்கள்!

குழந்தைகள் சமுதாயத்தை கண்டு வளர்கிறார்கள் என்பார்கள். ஆனால், அவர்கள் சமுதாயத்தை காணும் பார்வையை பெற்றோரிடம் இருந்து தான் பெறுகிறார்கள். பெற்றோர் எவ்வித பார்வை கொண்டுள்ளார்களோ, அவ்வழியே தான் குழந்தைகளும் வளர்கிறார்கள், வளர்வார்கள். எனவே, தவறான விஷயங்களை மழலைகள் முன்னால் பேசுவதும், செய்வதும் தவறு.  அவ்வகையில் வீட்டில் மழலைகள் முன்பு பெற்றோர் செய்யக்கூடாத, பேசக் கூடாத 6 விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்...

ஆபாசம்!

குழந்தைகளுக்கு கேட்குமாறு ஆபாச வார்த்தைகள், தீய வசனங்கள், சாபம் அளிப்பது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபடுவது நல்ல செயல் அன்று. இது பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கும் காரியமாகும்.

சண்டை!

கணவன்-மனைவி; உற்றார், உறவினர்கள்; பக்கத்து வீட்டாருடன் மழலைகள் முன்பு சண்டையிட வேண்டாம். இந்த செயல் குழந்தைகள் மத்தியிலும் பகைமை மற்றும் கசப்பான மனநிலை வளர ஒரு காரணமாக அமையும்.

புறம் கூறல்!

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் இல்லத்திற்கு வந்தால், முகத்திற்கு முன் அருமை, பெருமையாகவும், வீட்டை விட்டு சென்றவுடன் இகழ்ந்தும் பேச வேண்டாம். இது பெரும் தவறான அணுகுமுறை; இதை குழந்தைகள் உள்ளத்திலும் பதிக்க வேண்டாம்.

பொய் கூறல்!

நேரடியாகவோ, அலைபேசி, தொலைபேசி மூலமாகவோ செல்லங்கள் முன்னிலையில் பொய்மை கூறுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பொய் எனும் ஓர் தீய பழக்கம், இதர அனைத்து கெட்ட பழக்கங்களும் மனதில் உதயமாக உரமாகிவிடும்.

எதிர்மறை!

மழலைகள் முன்னிலையில் அல்லது அவர்களுடன் எதிர்மறையாக பேசுவது நல்லதல்ல. உன்னால் இயலாது, நீ தோற்றுவிடுவாய்,உன்னால் இதை செய்ய முடியாது, நீ வெற்றி பெறுவது கடினமான காரியம் போன்ற பொருளில்லா பேச்சுவார்த்தைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

தாழ்த்தி பேசுதல்!

ஏற்றத் தாழ்வு, மேலோர், கீழோர், பெரியவர், சிறியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என வேறுபாடு பார்த்து தாழ்த்தி பேசுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். இனிவரும் தலைமுறையாவது ஏற்றத்தாழ்வு எனும் தொற்று நோய் இல்லாமல் வளரட்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon