Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தைகளுக்கு மறக்காமல், அளிக்க வேண்டிய பழங்கள்..!

ஆறு மாதம் தாய்ப்பாலூட்டலுக்கு பின்னர், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை அளிக்க வேண்டியது அன்னையின் கடமையே! அப்படி ஆறு மாதம் முடிந்த குழந்தைகளுக்கு பற்கள் சரிவர முளைத்திருக்காது; செரிமான மண்டலம் திடப்பட்டிருக்காது; ஆகையால், குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை நன்கு அரைத்தோ அல்லது மசித்தோ தர வேண்டியது அவசியம். குழந்தைகளின் 7வது மாத தொடக்கத்தில் பெற்றோர்கள், தங்கள் செல்லங்களுக்கு மறவாமல், கட்டாயம் அளிக்க வேண்டிய சில பழங்கள் உள்ளன; அவை என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!

வாழைப்பழம்

வாழைப்பழம் குழந்தைகளுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்த வேண்டிய முக்கியமான பழம்; இதனை மசித்து, சிறிது பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்; இது குழந்தைகளின் செரிமானத்தை எளிதாக்க உதவும்.

ஆப்பிள்

ஆப்பிள் அனைத்து குழந்தைகளும் கட்டாயம் ருசிபார்க்கும் பழமாக உள்ளது; இதனை நன்கு வேகவைத்து, மசித்து அதனுடன் பால் சேர்த்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் ஒத்துக்கொள்ளவில்லை எனில், பப்பாளியை அளிக்கலாம்.

அவகேடோ  

அவகேடோ எனும் பழம் பட்டர் பழம் என்றும் அழைக்கப்படுகிறது; நன்றாக பழுத்த பழத்தினை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இதில் கொழுப்புச்சத்து மிகுந்து காணப்படுவதால், இது குழந்தைக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

பியர்ஸ் பழம்

இந்த பழமும் ஆப்பிள் போன்றதே! இதையும் நீங்கள் குழந்தைகளுக்கு அளிக்கலாம்; இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது.

சப்போட்டா  

சப்போட்டாவின் விதைகளை நீக்கி, நன்கு மசித்து, அதனுடன் பால் சேர்த்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்; இது அதிக சத்துள்ள பழம், குழந்தைகளுக்கு ஏற்றது. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon