Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய குஷ்பு இட்லி..!!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து, இணை உணவுகள் கொடுக்கத் தொடங்கியவுடன், அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கிய முதல் உணவாக இருப்பது இட்லி. இட்லி என்பது ஆவியில் வேகவைத்த உணவு; குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் உடல் நலத்திற்கும் அதிக நன்மை பயக்கக்கூடியது. நாம் உண்ணும் இட்லியிலும் பல வகைகள் உள்ளன; அதாவது பொடி இட்லி, டாலர் இட்லி, பட்டன் இட்லி, ரவா இட்லி, வாழைப்பழ இட்லி, மல்லிகை - குஷ்பு இட்லி என பல வகைகள் உள்ளன.

இவற்றில் மல்லிகை பூ போன்ற இட்லி எனும் குஷ்பு இட்லி எப்படி செய்வது என்பது குறித்து தான் இப்பதிப்பில் பார்க்க போகிறோம்..!!

என்னென்ன தேவை?

பச்சரிசி - 4 கப், ஜவ்வரிசி - 1 கப், ஆமணக்கு விதை - சிறிதளவு, உளுத்தம் பருப்பு - 1 கப், உப்பு - தேவையான அளவு, சமையல் சோடா - சிறிது.

செய்முறை..!

1. ஜவ்வரிசியையும் பச்சரிசியையும் தனித்தனியே ஊற வைத்து, தனித்தனியே அரைத்து, பின்னர் இரண்டு மாவையும் ஒன்றாய் கலக்கவும்  

2. இதன் பின்னர், நன்கு அரைத்த உளுத்தம் பருப்பையும், ஆமணக்கு விதையையும் மேற்கண்ட மாவு கலவையுடன் சேர்க்கவும் 

3. இவை அனைத்தையும் சேர்த்து உப்பு சேர்க்கவும்  

4. இட்லி வார்ப்பதற்கு முன் சமையல் சோடா சிறிதளவு எடுத்து மாவுடன் கலந்து, பிறகு இட்லி வார்க்கவும்

இந்த இட்லியில், பச்சரிசி சேர்த்திருப்பதால், இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்; மேலும் ஜவ்வரிசி, ஆமணக்கு, உளுந்து போன்றவையும் குழந்தையின் உடலுக்கு, உடல் வளர்ச்சிக்கு அதிக நன்மை பயக்கக்கூடியது.

மேலும் பெற்றோர்களே! இந்தக்கால இன்ஸ்டன்ட் இட்லிகளை தவிர்த்து நமது, பாரம்பரிய இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இவ்வகை இட்லிகளை அளித்து, குழந்தைகளை ஆரோக்கியம் கூடிய அறிவாளியாக்குங்கள்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon