Link copied!
Sign in / Sign up
4
Shares

குழந்தைகளுக்கு கழிவறை பழக்கங்களை கற்றுக்கொடுக்கும் போது ஏற்படும் 5 சிக்கல்கள்

குழந்தைகளுக்கு கழிவறை பழக்கங்களை சொல்லிக்கொடுக்கும் போது தான் பெற்றோர்கள் பல சிக்கல்களை சந்திப்பார்கள். சிலருக்கு இது சுலபமாக இருக்கும். சிலருக்கு இது கடினமான ஒன்றாக இருக்கும். இதில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்பு என்னவென்றால், அனைத்து குழந்தைகளும் ஒன்றல்ல. உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் நிச்சயமாக இது உங்களுக்கு புரியும். இங்கு, குழந்தைகளுக்கு கழிவறை பழக்கங்களை கற்றுக்கொடுக்கும் நீங்கள் சந்திக்கும் சில பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம். 

1 "என் குழந்தை கழிவறையில் சிறுநீர் கழிக்கிறான், ஆனால் மலம் கழிக்க மறுக்கிறான்"

இது அனைத்து பெற்றோர்களும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. அதுமட்டுமின்றி இது இயற்கையான ஒன்றே. பல குழந்தைகள் கழிவறையில் சிறுநீர் கழிப்பார்கள், ஆனால் மலம் கழிக்க மாட்டார்கள். இதற்கு, உங்கள் குழந்தைக்கு உங்கள் முன்னால் மலம் கழிக்க கூச்சமாக இருக்கலாம்.

இதை சரி செய்ய, அவர்கள் கழிவறையை உபயோகிக்கும் பொழுது, நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். இதனால் அவர்கள் சௌகரியமாக உணர்வார்கள். மற்றொரு பிரச்சனை என்னவென்றால், சில குழந்தைகள் மலம் கழிப்பது என்பது, தங்களின் உடல் பாகத்தை இழப்பது என்று பயப்படுவார்கள். இதை சரி செய்ய, குழந்தைகளுக்கு, மலம் கழிப்பது அனைவரும் செய்யும் சாதாரண செயல் என்பதை புரிய வைக்க வேண்டும்.

2. "நாங்கள் சில நாட்கள் வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள போகிறோம். இது அவனின் கழிவறை பழக்கங்களில் இடையூறை ஏற்படுத்துமா?"

பொதுவாக எந்த இடையூறும் ஏற்படாது. ஒன்றிரண்டு நாட்கள் டயப்பர் உபயோகிப்பதால் தவறேதும் இல்லை. இது தான் உங்கள் குழந்தைக்கு கழிவறை குறிப்புகளை கற்றுக்கொடுக்கும் நேரம். நீங்கள் ஹோட்டலில் தங்கியிருக்கும் போதும், கழிவறை பழக்கங்களை கற்றுக்கொடுக்கலாம். இதனால், வீட்டிற்கு வெளியில் கழிவறை உபயோகப்படுத்தும் பழக்கம் அவர்களுக்கு வரும்.

3. "என்ன தான் கழிவறை பழக்கங்களை கற்றுக்கொண்டாலும், என் குழந்தை இன்னும் டயப்பரில் மலம், சிறுநீர் கழிக்கிறான்"

இது எல்லா குழந்தைகளுக்கு நடக்கிற வழக்கமான ஒன்றாகும். இதற்காக நீங்கள் கோபப்பட கூடாது. அமைதியாக உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துங்கள். அது தப்பு என்று உங்கள் குழந்தைக்கு புரிய வையுங்கள். எவ்வளவு பின்னடைவு ஏற்பட்டாலும், கழிவறை பழக்கங்களை கற்று கொடுப்பதை நிறுத்த வேண்டாம்.

4. "என் மகளுக்கு கழிவறையில் மலம் கழிக்க விருப்பம் இல்லாததால், அவள் பல நாட்களுக்கு மலம் கழிக்கவே இல்லை"

இந்த மாதிரி நிகழ்வு நடக்கும் பொழுது, இந்த செயல்முறையை சிறிது காலம் ஒத்திவைப்பது நல்லது. இது மல சிக்கலை தவிர்க்கும். மலத்தை வெளியேற்றாமல் அடக்கும் பொழுது அசௌகரியமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். எனவே, இந்த மாதிரி நேரங்களில் டயப்பர் போட்டுவிடுங்கள். அப்படியும் மலம் கழிக்கவில்லை எனில், அவர்களின் உணவில் தான் பிரச்சனை. மலச்சிக்கலை தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். கழிவறையை உபயோகப்படுத்த கற்றுக்கொள்ள அவர்களுக்கு சிறிது காலம் வழங்குங்கள்.

5. "சிறிய கழிப்பறையில் இருந்து பெரிய கழிப்பறைக்கு எப்படி குழந்தைகளை தயார் செய்வது?"

சிறிய கழிப்பறையை உங்கள் குழந்தை நன்றாக உபயோகப்படுத்த கற்றுக்கொண்டால், அதை ஒரு விளையாட்டு போல் காண்பித்து அடுத்த நிலைக்கு அழைத்து செல்லுங்கள். அவர்கள் பெரிய கழிப்பறையை பழகிக்கொள்ள சில நாட்கள் பிடிக்கும். மீண்டும், இந்த நிலையில் முதல் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கழிப்பறை பெரிதாக இருந்தால் படிக்கட்டை பயன்படுத்தலாம். சிறிது காலத்தில், குழந்தைகள் அவர்களாகவே கழிவறையை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon