Link copied!
Sign in / Sign up
13
Shares

குழந்தைகளுக்கு இஷ்டமான சோன் பப்டி செய்வது எப்படி?

 

பெரும்பாலான குழந்தைகள் எப்பொழுதும் அதிக ஆர்வத்தை இனிப்பு மற்றும் சாக்லேட் ஐட்டங்களின் மீது கொண்டிருப்பர்; குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளின் மீது ஒருவித ஆசை இருக்கும். இனிப்பு உணவுகளை, சாக்லேட்களை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் மிகவும் குஷியாகி விடுவார்கள். அப்படிப்பட்ட, குழந்தைகளை குஷிப்படுத்தும் ஒரு இனிப்பு உணவை எப்படி செய்வது என்பதையே நாம் இந்த பதிப்பில் காண உள்ளோம்..! 

தேவையானவை..!

கடலை மாவு – ஒன்றரை கப், மைதா – ஒன்றரை கப், பால் – 2 மேஜைக்கரண்டி, சர்க்கரை – இரண்டரை கப், ஏலக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி, தண்ணீர் – ஒன்றரை கப், பாலிதீன் ஷீட் -1, நெய் – 250 கிராம்.

செய்முறை...

1. ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மைதா மாவு இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும் 

2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி அது சூடானதும், அதில் கலந்த மாவை போட்டு, மாவு லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி வைத்து, ஆற வைக்கவும்

3. பின்னர், ஒரு வாணலியில் தண்ணீர், சர்க்கரை, பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை, அதை நன்கு கொதிக்க விடவும்; அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் நன்றாக ஆற வைக்கவும்  

4. பின்பு ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நன்கு நெய்யைத் தடவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் 

5. இந்த தட்டில், ஏற்கனவே நாம் குளிர வைத்துள்ள மாவு மற்றும் சர்க்கரை பாகு இவற்றை சேர்த்து, நன்கு கரண்டியை வைத்து கிளற வேண்டும் 

6. அவ்வாறு நன்றாக கிளறும் போது, மாவானது நீள நீளமாக சுருளும்; மாவு சுருள்வது, குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும் 

7. இந்த கலவையில், ஏலக்காய் பவுடரைத் தூவி, நன்கு குளிர வைக்க வேண்டும்; பின்னர், அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து, தேவைக்கேற்ப அலங்கரித்து, ஒரு பாலிதீன் ஷீட்டால், சுற்றி வைக்க வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon