Link copied!
Sign in / Sign up
17
Shares

குழந்தைகளுக்கு ஏற்ற காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சமையல் குறிப்புக்கள்!

நீங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியிருந்தால், உங்களது நிலை எங்களுக்கு புரிகிறது. என்ன தான் அது உங்களுக்கு ஒரு நிம்மதி உணர்வை தந்தாலும், சில நேரங்களில் அதை நீங்கள் இழப்பதாய் உணர்வீர்கள். உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டதால், அவர்களுக்கு மற்ற உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உங்களது அடுத்த நடவடிக்கை, உங்கள் குழந்தைகளின் ஜீரணத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற உணவுகளை தேர்ந்தேடுத்து கொடுக்க வேண்டும். இங்கே உங்கள் குழந்தைக்கு ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை குறித்து இப்போது பார்ப்போம்.

1 சக்கரை வள்ளிக் கிழங்கு மசியல்

சக்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் தானியங்கள் ஆகியவற்றை நன்கு வேக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன், தயிர் மற்றும் சிறிது இலவங்க பட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலந்து, குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

2 பூசணிக்காய் மசியல்

பூசணிக்காயை ( இனிப்பு பூசணிக்காய் ) வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அத்துடன் சிறிது தயிர் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து கலந்து குழந்தைக்கு கொடுக்கவும்.

3 மசித்த வாழைப்பழம்

மிருதுவான மென்மையான வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்கு மசித்து உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.

4 கேரட் கூட்டு

வேகவைத்த ஆப்பிள், கேரட், அரிசி, ஓட்ஸ் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து நன்கு மசித்து கலந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பதம் வரும்வரை நன்றாக மசித்து கலக்கவும். இது உங்கள் குழந்தைக்கு ஏற்ற மிகவும் சத்தான உணவு.

5 பீச்

பீச்கள், சமைத்த பின்பு மிகவும் ருசியாக இருக்கும். இதை வேகவைத்து, நன்கு மசித்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கவும். இதில் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளது. மேலும், உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

ஒரு முக்கிய குறிப்பு:

முதலில் இந்த காய்கறி மற்றும் பழங்களை தனித்தனியாக குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களுக்கு ஏதாவது அலர்ஜி ஏற்படுகிறதா என்று பாருங்கள். அவர்களை நலமாக இருக்கிறார்கள் என்றால் பின்பு மற்ற காய்கறி மற்றும் பழங்களுடன் கலந்து கொடுங்கள். ஆனால், இந்த காய்கறி மற்றும் பழங்களில் அவர்களுக்கு ஏதாவது ஒத்துக்கொள்ளாவிட்டால், உங்கள் குழந்தையின் மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனையை பெறுங்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon