Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தைகளுக்கான அம்பர்லா பிராக் தைப்பது எப்படி?

பெண்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை அனைத்துவித கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லத்தரசியோ அல்லது வேலைக்குச் செல்லும் பெண்மணியோ எவராயினும் கற்றிருக்க வேண்டிய சில முக்கிய கலைகள் உள்ளன. அப்படிப்பட்ட முக்கியமான கலைகளுள் ஒன்று தான் தையல்..! தையற்கலை என்பது அணைத்து பெண்டிரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று; ஏனெனில் தற்காலத்தில் நாம் சம்பாதிக்கும் அனைத்து பணத்தில் பெரும்பகுதி, தையலுக்கு தான் செல்கிறது; இதுவே உண்மை நிலை.

பெண்கள் மட்டும் தையற்கலையைக் கற்றுக் கொண்டால், அவர்களின் ஓய்வு நேரத்தில், தமக்குத் தேவையான ஆடைகளை தாங்களே, தங்களுக்கு பிடித்த விதத்தில் தைத்துக் கொள்ளலாம்; இவ்வாறு செய்வதால், பணத்தை நன்கு சேமிக்கலாம், உங்கள் தையல் திறனும் மேம்படும். மேலும் துணிகளில் ஏதேனும் கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டால், அதைத் தைக்க உங்களால் இயலும்; அவசரமான நேரத்தில் கிழிசலை சரி செய்ய தையற்கடையை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை; மேலும் அதற்கென செய்யப்படும் செலவுகளும் குறையும்..!

கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கான ஸ்வெட்டர் மற்றும் ஆடைகளை தன் கையால் செய்து அவர்களுக்கு அணிவிக்கும் பொழுது, அது கர்ப்பிணி பெண்களை குழந்தைகளுடன் மேலும் இணைக்கிறது; தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான ஆடைகளை தாங்களே வடிவமைக்கலாம். மேலும் கணவருக்கான ஆடைகளை அழகாய் வடிவமைத்து, அவரின் மனதைக் கவரலாம்; மேலும் வீட்டிலுள்ளோரின் மனதைக் கவர, உங்கள் தையற்கலையை உபயோகிக்கலாம்..!!

அப்படிப்பட்ட தையற்கலையை எளிதில் கற்கும் வகையில், காணொளி வடிவிலான பதிப்பை வழங்குகிறோம்..! படித்து பார்த்து தையல் நிபுணராக வாழ்த்துக்கள்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon