Link copied!
Sign in / Sign up
9
Shares

குழந்தைகளுக்கான சத்துமாவு லட்டு செய்யத்தெரியுமா??

உங்கள் குழந்தைகளை சத்தானவர்களாக மாற்ற, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் சரியான ஊட்டச்சத்தினை அளிக்க வேண்டியது பெற்றோர்களான உங்களது கடமையே! அவ்வகையில் உங்கள் கடமையை சீரும் சிறப்புமாக, செம்மையாக செய்ய உதவவே, இந்த பதிப்பு..! குழந்தைகளுக்கு பலமளிக்கும் சத்துமாவினை பற்றி அறிந்திருப்போம் ஆனால், அத்தகைய சத்துமாவினைக் கொண்டு சத்தான லட்டு செய்வது எப்படி என அறிவீரா? சுவையான சத்துமாவு லட்டு செய்வது எப்படி என இந்த பத்தியில் படித்தறிவோம், வாருங்கள்..!

தேவையானவை:

சோயா பீன்ஸ்-1/2 கிலோ, கேழ்வரகு-1/2 கிலோ, கொண்டைக்கடலை-1/2 கிலோ, பச்சைப்பயறு-1/2 கிலோ, சம்பா கோதுமை ரவை-1/2 கிலோ, புழுங்கல் அரிசி/சம்பா அரிசி-1/2 கிலோ, உளுந்து-1/4 கிலோ, சர்க்கரை-1 கப், பாதாம் பருப்பு-20 பருப்புகள், முந்திரிப் பருப்பு-20 பருப்புகள், நெய்-1/2 கப், ஏலக்காய்ப்பொடி - சிறிதளவு

செய்யும் முறை..!

1. சோயா, உளுந்து, கொண்டைக்கடலை, கேழ்வரகு, சம்பா கோதுமை ரவை, அரிசி, பச்சைப் பயறு போன்றவற்றைத் தனித்தனியாக வாணலியில் வறுத்து வைத்துக் கொள்ளவும்

2. பின் சூடு ஆறியதும் அனைத்து பொருட்களையும் ஒன்றாய் அரைத்து மாவாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் 

3. பாதாம், சர்க்கரை, முந்திரி போன்றவற்றைத் தனித்தனியாகப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்  

4. வாணலி ஒன்றில், சிறிது நெய் சேர்த்து, அரைத்த மாவுடன் வறுத்த பருப்புகளின் பொடியைச் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்

5. இக்கலவையுடன் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளவும் 

6. மற்றொரு வாணலியில் 1/2 கப் நெய் விட்டு, நன்றாக சூடாக்கியபின், இம்மாவுடன் சேர்த்து கிளறி மூடி வைக்கவும்  

7. பின் 1/2 மணிநேரம் சென்ற பின், லட்டு போன்ற உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்கு அளிக்கவும்

அவ்வளவே, சுவை மிகுந்த சக்தியளிக்கும் சத்துமாவு லட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகிவிடும்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon