குழந்தைகளுக்கான பழ நிப்பிள் (fruit pacifier) - அறிமுகம்..!
குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் அளிக்கப்படும்; அன்னையின் மார்பில் தாய்ப்பால் சுரப்பு நின்று போனால், பாட்டில் பால் அளிக்கப்படும். இந்த நிலையில் குழந்தைகள் 6 மாதங்களை கடந்த பின்னர் மெதுவாக அவர்தம் பற்கள் வளர்ச்சி தொடங்கும்; இந்நிலையில் குழந்தைகளுக்கு எதையேனும் கடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என துரு துருவென்று இருக்கும்.
இச்சமயங்களில் குழந்தைகளுக்கு நிப்பிளை அளித்து அதை மெல்லச் செய்து, குழந்தைகளை சமாதானப்படுத்துவர் அன்னை. இவ்வாறு வெறும் நிப்பிளை அளிப்பதற்கு பதிலாக பழங்கள் கொண்ட நிப்பிளை அதாவது fruit pacifier - ஐ குழந்தைகளுக்கு அளிக்கலாம்; ஏனெனில் இதில் பழங்களை வைத்து அளிப்பதால், குழந்தைகளுக்கு பழங்களில் நிறைந்துள்ள சத்துக்களும் கிடைக்கும்; மேலும் அவர்களால், பற்கள் முளைப்பதால் உண்டாகும் அந்த குறுகுறுப்பையும் இதைக் கடித்து தீர்த்துக் கொள்ள முடியும்..!
இந்த பழ நிப்பிள் குறித்த தகவல்களை மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த பதிப்பில் பார்த்து படித்தறியுங்கள்..!!
