Link copied!
Sign in / Sign up
13
Shares

குழந்தைகளுக்கான கோடைக்கால 5 குறிப்புகள்...

உங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்திருந்தால் நீங்கள் நிச்சயமாக அவர்களை கோடைக்காலத்தில் எப்படி பார்த்துக்கொள்வது என்று கவலையடைய தொடங்கியிருப்பீர்கள். கோடைக்காலத்தில் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய 5 குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது.

1. நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் செல்ல குழந்தையிடம் எப்போதும் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை வளர்ச்சியடைந்து வருகிறது, இதனால் அவர்கள் எளிதில் தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். எனவே, நீர்ப்போக்குவதை தவிர்க்க குழந்தைகள் குறைந்தது 300மிலி தண்ணீர் குடிக்க வேண்டும்.மேலும், குழந்தையின் சிறுநீரக வெளியீட்டைப் பரிசோதிக்கவும்.

2. சீரான உணவுமுறை

நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் குழந்தையின் உணவுமுறை. தினமும் குறைந்தது நான்கு முறையாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டும். இது அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுப்பதோடு வேர்வை மூலம் ஊட்டச்சத்துக்கள் வெளியேறுவதையும் தடுக்கிறது. மேலும், தினமும் ஒரு முறையாவது நன்கு காய்ச்சிய பாலை குழந்தைக்கு கொடுக்கவும். கோடைக்காலத்தில் மாட்டுப்பால் விரைவில் கெட்டுவிடும். எனவே, அதற்கு பதிலாக பவுடர் பாலை உபயோகிக்கவும். குழந்தையின் உணவில் அதிக அளவில் பழங்களை சேர்ப்பது நல்ல பலனை தரும்.

3. சரியான ஆடை

கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு சரியான உடையை தேர்ந்தெடுப்பது அவர்களின் சருமத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமான ஒன்று. இதில் பருத்தி ஆடைகளுக்கே முதலிடம். குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடை இறுக்கமாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது சிறிது சன்ஸ்கிரீன் லோஷன் பூசி அழைத்து செல்லவும்.

4. சரியான அட்டவணை

கோடைக்காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும், இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். பெற்றோராகிய நீங்கள், உங்கள் குழந்தைக்கு ஏற்றார் போல திட்டமிட வேண்டும். குழந்தைகள் வெளியில் விளையாடும் நேரத்தை மதியத்திற்கு பிறகோ அல்லது மாலை நேரத்திற்கோ மாற்றி திட்டமிட வேண்டும். முடிந்தவரை குழந்தைகளை சூரிய வெப்பம் அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கவும். உதாரணமாக, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள நேரம். குழந்தைகளை குளிர்ச்சியாகவும், நல்ல காற்றோட்டம் உள்ள அறையின் உள் இருக்க செய்வது சிறந்தது.

5. நோய்களிடம் இருந்து விலக்கி வையுங்கள்

உங்கள் குழந்தையை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும், சூரிய வெப்பத்திலிருந்து விலக்கி வைப்பதும் அவர்களை நோய்களிடமிருந்து பாதுகாக்கும். சூடான மற்றும் ஈரப்பதமான நாட்களில் குழந்தைகளுக்கு கழுத்து அல்லது முதுகு மீது தடிப்புகள் ஏற்படுகிறது. ஒருவேளை குழந்தைக்கு தடிப்புகள் ஏற்பட்டிருக்குமாயின் இந்த வீட்டு மருத்துவமுறைகள் மூலம் சரிசெய்யலாம்:

நன்கு கொதித்து ஆறவைத்த தண்ணீரில் தயிரை கலந்து தடிப்புகளின் மீது பூசினால் விரைவில் குணமடையும்.

முல்தானி மட்டியையும் பயன்படுத்தலாம். இதில் குளிர்ச்சியூட்ட கூடிய பொருட்கள் இருப்பதால் எளிதில் குணமடையும்.

காலமைன் களிம்பு தடிப்புகளுக்கு ஏற்றது. இதை பயன்படுத்தும் முன் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

வீட்டு மருத்துவ முறைகளை உபயோகிக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் அவை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவை குழந்தைகளை கோடைக்காலத்தில் பாதுகாக்கும் வழிமுறைகளாகும். இவற்றை பயன்படுத்தி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon