Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளுக்கான கோடைகால 5 உணவு வகைகள்..!

குழந்தைகள் வெயிற்காலங்களில் பலவித நோய்களுக்கு ஆளாகலாம்; அல்லது வெயிலின் தாக்கத்தால் உடல் பலவீனம் அடையலாம். எனவே, வெயிற்காலத்தில் குழந்தைகளை வெயிலிலிருந்தும், நோய்களிலிருந்தும் காக்க சரியான போஷாக்கு நிறைந்த உணவுகளை பெற்றோர்கள் அளிக்க வேண்டும். என்னென்ன உணவுகளை அளிக்கலாம் என்ற சந்தேகம் கிளம்புகிறதா? 1-3 வயது குழந்தைகளுக்கு ஏற்ற, வெயிற்காலத்தில் அளிக்க வேண்டிய உணவுகள் குறித்து இப்பதிப்பில் படித்தறிவோம்..

1. தயிர் சாதம்..

தயிர்சாதம் என்பது வெயிற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. இந்த தயிர் சாதத்தில் காய்கறிகள், மாதுளை, உலர் திராட்சை, முந்திரி வகை பருப்புகள் கலந்து குழந்தைக்கு அளிக்கவும். இது வயிற்றிக்கு குளுமை அளித்து, நல்ல சத்து நிறைந்ததாக இருக்கும்..!

2. பூசணி சாஸ்..!

குழந்தைகளுக்கு கூழ் போன்ற உணவுகளை தானியங்கள் கொண்டு செய்து அளிப்போம் அல்லவா! அதே போல், இனிப்பான காய்கறிகள், பழங்கள் இவற்றை கலந்து பூசணி துண்டுகளையும் சேர்த்து, சிறிது கார சுவையையும் சேர்த்து, கெச்சப் போல் செய்து, குழந்தைகளுக்கு சிப்ஸ் மற்றும் பஜ்ஜி போன்ற தீனிகளுடன் சேர்த்து அளிக்கவும். இல்லையேல் காய்கறிகள், பழங்களை சேர்த்து கூழ் தயாரித்து அளிக்கலாம். இது குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும்..

3. கீரை சாதம்..

குளிர்ச்சி தரும் கீரை வகைகளைக் கொண்டு, கீரை சாதம் தயாரித்து நெய் சேர்த்து குழந்தைக்கு அளிக்கவும். இது குழந்தையின் உடலிற்கு ஆரோக்கியம் அளித்து, அவர்களுக்கு சக்தி தரும். மேலும் நோய்களிலிருந்து காக்கும்..!

4. சிக்கன் சூப்..!

சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு, காய்கறித் துண்டுகளையும் சேர்த்து, சுவையான சூப் தயாரித்து, உணவு உண்பதற்கு முன்னர் அளிக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக அமையும்..!

5. ஐஸ் கிரீம்..!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால், வீட்டிலேயே சுகாதாரமான முறையில் தயாரித்து அளிக்க முயலுங்கள். மேலும் பழங்கள் கலந்த ஐஸ் கிரீம் அளிப்பது நல்லது. இல்லையேல், பழங்கள் கொண்ட சாலட் செய்தும் அளிக்கலாம்..! இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon