Link copied!
Sign in / Sign up
8
Shares

குழந்தைகளுக்கான இனிப்பான பால் கொழுக்கட்டை..!

குழந்தைகள் அனைத்து வகை உணவுகளையும் உண்டு, அவர்கள் எல்லா சுவைகளையும் அறிந்து, அத்தனை சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் அன்னையர் உணவுகளை சமைத்து, மழலைகளுக்கு அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்தக்கால துரித உணவு, அயல்நாட்டு உணவு வகைகள் என சத்துக்கள் அற்ற, சாவு மணி அடிக்கக் காத்திருக்கும் உணவுகளை விடுத்து, நம் பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு அளித்து அவர்களை ஆரோக்கியமானவர்களாக வளரச் செய்யுங்கள் தாய்மார்களே! இப்பதிப்பில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்துடன் இனிய சுவையை அளிக்கும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என பார்க்கலாம்..! 

தேவையானவை..

தேங்காய்த்துருவல் -1 தேக்கரண்டி, ஏலக்காய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி  அரிசி மாவு - ஒரு கப், பனை வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், காய்ச்சிய பால் ஒரு கப், முந்திரித்துண்டுகள் - தேவையான அளவு, நெய் - 1 தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை 

1.  வாணலியில், அரிசி மாவினை சிவக்க வறுத்துக்கொள்ளவும் 

2. தண்ணீரை தேவையான அளவு கொதிக்க வைத்து, அதில் மாவைக் சேர்த்துக் கிளறவும்  

3. இக்கலவையுடன், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும் 

4. கலவையின் சூடு ஆறியதும், கையினில் நெய் தடவிக்கொண்டு மாவினைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிய பின், நன்கு வேகவைக்கவும் 

5. வெல்லத்தை சிறிதளவு நீரில் கரைத்து வடிகட்டி, அதில் காய்ச்சிய பாலை கலந்து, மிதமான தீயில் கொதிக்கவிடவும்  

6. கொதிக்கும் கலவையில் வேக வைத்த உருண்டைகளைப்போட்டு மெதுவாகக் கிளறவும் 

7. பின்னர், சற்று நேரம் கழித்து, அடுப்பினை அணைத்து விட்டு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்  

8. முந்திரிகளை நெய்யில் வறுத்து கலவையில், சேர்த்துப் பரிமாறவும் 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon