Link copied!
Sign in / Sign up
79
Shares

குழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ

குழந்தைக்கான உணவில் பெற்றோர் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல், அவை குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு கொடுக்கும் நீர் கூட சுத்தமானதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டில் தயாரித்து கொடுப்பதே சிறந்தது. இங்கு குழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம். 

சத்து மாவு பொடி தயாரிப்பு

தேவையான பொருட்கள்

1 கேழ்வரகு மாவு - 1 கிலோ

2 வேர்க்கடலை - 200 கிராம் (வறுத்தது)

3 கம்பு - 200 கிராம்

4 சம்பா கோதுமை - 200 கிராம்

5 கோதுமை - 200 கிராம்

6 மக்காசோளம் - 200 கிராம்

7 பொட்டுக்கடலை - 200 கிராம்

8 பச்சரிசி - 200 கிராம்

9 சோளம் - 200 கிராம்

10 சோயா - 200 கிராம்

11 பாதாம் - 50 கிராம்

12 முந்திரி - 50 கிராம்

13 ஏலக்காய் - 6 (அ) 7

14 பாசிப்பயறு - 200 கிராம்

15 கொள்ளு - 200 கிராம்

16 சுண்டல் - 200 கிராம்

17 பார்லி - 200 கிராம்

18 ஜவ்வரிசி - 200 கிராம்

செய்முறை

மேற்கூறிய பொருட்களை பச்சையாக நன்கு மாவாக அரைத்து கொள்ளவும்.

Video Credits : Amma samayal

சத்து மாவு கஞ்சி

தேவையான பொருட்கள்

தயாரித்த சத்து மாவு பொடி - 2 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை

1 இரண்டு தேக்கரண்டி மாவை தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து, அதை வடித்து கொள்ளவும்.

2 அந்த கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.

3 அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கி விடவும்.

Video Credits : Amma samayal

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon