Link copied!
Sign in / Sign up
7
Shares

குழந்தைகளுக்கான ஆரோக்கியம் தரும் 3 உணவுகள்..!


குழந்தைகள் என்றாலே உணவு உண்ண அடம்பிடிப்பது சாதாரணமான விஷயம். ஆனால், அப்படிப்பட்ட குழந்தைகளை சமாளித்து, தாஜா செய்து உணவு உண்ணச் செய்யும் தாய்மார்களுக்கு நோபல் விருது வழங்கினாலும், அது மிகையில்லை. குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகள் என்றால் தான் அதிக அடம்பிடிப்பர்; சரியாக உண்ண மாட்டார்கள்.

குழந்தைகளின் உணவு பிரச்சனை தான் தாய்மார்களின் பெரிய பிரச்சனை. அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டிய 3 உணவு பொருட்களைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்..

1. ஆளி விதை…

ஆளி விதைகள் என்பவை அதிகம் ஒமேகா 3 அமிலங்களைக் கொண்டவை. இவை மூளை வளர்ச்சிக்கு மிக அவசியம். குழந்தைகளின் உணவில் இவற்றை சேர்த்து, உணவாக அளிப்பது நல்லது; குழந்தைகள் இதை உண்ண விரும்பவில்லை எனில் அவர்கள் விரும்பும் வண்ணம் பேன்கேக் போன்றவற்றுடன் சேர்த்து, குழந்தைகளுக்கு உண்ண அளிக்கலாம்.

2. இனிப்பு உருளை..

இனிப்பு உருளைகள், இவை பேரிலும் சுவையிலும் இனிப்பைக் கொண்டிருப்பதால், குழந்தைகள் விரும்பி உண்பர்; இவை வைட்டமின் எ சத்துக்கள் நிரம்பியவை. கண்களுக்கும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும் இவை பெரிதும் உதவுகின்றன. இனிப்பு உருளைகளை மசித்து அல்லது வறுத்து குழந்தைகளுக்கு உண்ண அளிக்கலாம்; அவர்கள் விரும்பி உண்பர்.

3. கருப்பு பீன்ஸ்..

கருப்பு பீன்ஸ்கள் சிறந்த புரதச்சத்து கொண்டவை; இவற்றில் கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எவ்வளவு கருமையாக உள்ளதோ அவ்வளவு சத்துக்கள் நிறைந்திருக்கும். மேலும் இவை இருதய நோய்களையும், அதிக கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகின்றன. இருதய நோய்களும், உயர் கொழுப்புச் சத்துக்களும் இன்றைய காலத்தில், குழந்தைகளிலும் காணப்படுகின்றன; குழந்தைகளுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டன. ஆகையால், உங்கள் குழந்தைகளுக்கு மறவாமல், கருப்பு பீன்ஸ்களை உணவாகக் கொடுங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon