Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைகளுக்கான 5 வட இந்திய உணவுகள்..!

குழந்தைகளுக்கு நாம் பலவகை உணவுகளை சமைத்து அளித்திருப்போம். அவ்வுணவுகளை குழந்தைகள் விரும்புகிறதா இல்லையா என்று அறியாமலே அளித்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்திய ஆய்வில் குழந்தைகள் சில வாடா இந்திய உணவுகளை விரும்பி உண்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வுணவுகள் என்னென்ன, எத்தகைய சத்துக்கள் கொண்டவை என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..

1. கேரட் கீர்..!

கேரட் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். இதை பாலுடன் சேர்த்து கீர் தயாரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர். இதில் வைட்டமின் எ மற்றும் சி, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

2. வெந்தயக் கிச்சடி...!

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாக இந்த வெந்தயக் கிச்சடி விளங்குகிறது. ஆனால், பலர் குழந்தைகளால், வெந்தயத்தை எடுத்துக் கொள்ள இயலாது; சேர்க்க இயலாது என்று எண்ணுகின்றனர். ஆனால், அது உண்மையல்ல. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் வெந்தயம் ஏற்றதே! மேலும் வெந்தயத்தை கிச்சடியாக செய்து அளிக்கையில், குழந்தைகளின் விருப்ப உணவாக இது விளங்குகிறது. 11 மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

3. பாசிப்பயறு சூப்..

பாசிப்பயறு சூப் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. இதை குழந்தைகளுக்கு அளித்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு திறன் பலப்படும். மேலும் காய்ச்சல், சளி, இருமல், உடல்வறட்சி போன்ற நோய்களின் போது, இந்த சூப்பினை அளித்தால், குழந்தைகள் விரைவில் நலம் பெறுவர். 6 மாதத்திற்கு பின் குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

4. ஆப்பிள் ராகி அல்வா..

ஆப்பிள் மற்றும் ராகி சேர்த்து அல்வா செய்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். இது குழந்தைகளில் மலச்சிக்கல், டையேரியா, பேதி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. இதனை குழந்தைகளுக்கு 7 மாதத்தில் இருந்து அளிக்கலாம். இதன் சுவை குழந்தைகளை கவர்ந்திடுகிறது.

5. உருளை சாதம்..

உரித்த உருளையினை சாதத்துடன் சேர்த்து சுவைமிக்க வகையில் உருளை சாதம் தயாரித்து குழந்தைகளுக்கு அளித்தால் அவர்கள் ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் பெறுவர். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆகவே இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. இதனை 7 அல்லது 8 மாதத்திற்கு பின் கொடுப்பது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon