Link copied!
Sign in / Sign up
39
Shares

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்: ஒரு A-Z வழிகாட்டி

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டால் தான் அவர்கள் பல்வேறு நோய்களில் இருந்து விலகி இருப்பார்கள். ஊசிகள் மற்றும் குழந்தைகளின் அழுகையை நினைத்து சற்றே பயமாக இருந்தாலும், இது அவசியமானது. ஏனெனில் இந்த காலத்தில் அதிகரித்து வரும் நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டிப்பாக தேவை . இங்கே, குழந்தைகளுக்கு போடா வேண்டிய சில தடுப்பூசிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

1 ஹெபடைடிஸ் B

உங்கள் குழந்தைக்கு 3 முறை இந்த தடுப்பூசியை போட வேண்டும். ஒன்று குழந்தை பிறந்த உடனே போட வேண்டும்; இன்னொன்று இரண்டு மாதங்கள் கழித்து; மற்றொன்று குழந்தைக்கு 6-8 மாதங்கள் ஆகும் பொழுது.

குழந்தைக்கு போடப்படும் முதல் தடுப்பூசி இதுதான். சில பள்ளிகள், குழந்தைகள் பள்ளிக்கு சேருவதற்கு முன் கண்டிப்பாக ஹெபடைடிஸ் B தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

2 ரோட்டா வைரஸ்

இந்த தடுப்பூசியை, சில மாதங்களுக்கு ஒரு முறை என 2-3 முறை போட வேண்டும். முதல் தடுப்பூசி குழந்தைக்கு 2 மாதங்கள் ஆகும் போது போடப்படுகிறது; இரண்டாவது தடுப்பூசி குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகும் போது போடப்படுகிறது; மூன்றாவது தடுப்பூசி, இரண்டாவது தடுப்பூசியின் தாக்கத்தை பொறுத்து போடப்படுகிறது. தேவையென்றால் மட்டுமே மூன்றாவது தடுப்பூசி போடா வேண்டும்.

இந்த தடுப்பூசி ரோட்டா வைரஸ் எனும் நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

3 டிடிபி (DTaP)

DTaP என்பது டிப்தீரியா டெட்டானஸ் பெர்டுஸிஸ் (தீவிர இருமல்) ( diphtheria, tetanus and pertussis (extreme coughing) ) என்பதை குறிக்கும். உங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க 5 முறை இந்த தடுப்பூசியை போட வேண்டும். இந்த தடுப்பூசியை முறையே குழந்தைகளுக்கு 2,4 மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு கொடுக்க வேண்டும். மீண்டும் 15-18 மாதங்கள் ஆகும் போது குழந்தைகளுக்கு இதை போட வேண்டும். கடைசி தடுப்பூசியை 4-6 வயதாகும் போது போட வேண்டும்.

4 ஹெச்ஐபி (Hib)

இது குழந்தையை ஹேமோஃப்ஹிலஸ் இன்ஃப்ளூயன்ஸா பி வகை நோயிலிருந்து பாதுகாக்கிறது. இது பாக்டீரியல் மெனின்ஜைடிஸ்க்கு எதிராக உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 2 முதல் 6 மாதங்களுக்கு, சமமான இடைவேளையில் 4 தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகிறது.

5 நிமோகாக்கல் (Pneumococcal conjugate vaccine - PCV)

இந்த தடுப்பூசி உங்கள் குழந்தைகளை நரம்பு மண்டல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த தடுப்பூசியை 4 முறை போட வேண்டும். முதல் தடுப்பூசி உங்கள் குழந்தைக்கு இரண்டு மாதங்கள் ஆகும் போது போடப்படுகிறது. அதன் பிறகு குழந்தைக்கு 12-15 மாதங்கள் ஆகும் வரை ஒரு மாதத்திற்கு ஒரு இதை கொடுக்க வேண்டும்.

6 ஐபிவி (Inactive Poliovirus Vaccine - IPV)

இந்த தடுப்பூசி உங்கள் குழந்தைகளை போலியோவிலிருந்து பாதுகாக்கிறது. முதல் ஊசி குழந்தைக்கு 2 மாதங்கள் இருக்கும் போது போடப்படுகிறது; இரண்டாவது 4 மாதங்களிலும், இறுதி தடுப்பூசி 6-18 மாதங்களுக்குள் போடப்படுகிறது. என்ன தான் குழந்தைகள் அழுதாலும், இந்த தடுப்பூசி மிகவும் அவசியமானது.

7 இன்ஃப்ளூயன்ஸா

இந்த தடுப்பூசி உங்கள் குழந்தைகளை காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது. இது ஒரு பருவகால மாற்று தடுப்பூசியாகும். காய்ச்சல் அதிகமாக பரவும் போது இது கொடுக்கப்படுகிறது. குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகிய பின்னர் இதை கொடுக்கலாம்.

8 எம்.எம்.ஆர் (MMR)

இது தட்டம்மை நோயை குறிப்பதாகும். இந்த தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. ஒன்று குழந்தைக்கு 12-15 மாதங்கள் ஆகும் போது போடப்படும்; மற்றொன்று, குழந்தைக்கு 4-6 வயதாகும் போது போடப்படும். இந்த தடுப்பூசியை குழந்தை பிறந்து 28 நாட்களில் நாட்களில் கூட போடலாம்.

9 நீர்க்கோளவான் (Varicella)

இது சின்னம்மை நோயிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கிறது. இதில் ஒன்றை, குழந்தைக்கு ஒரு வயதாகும் போது கொடுக்க வேண்டும்; மற்றொன்று, குழந்தைக்கு 4-6 வயதாகும் போது கொடுக்க வேண்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon