Link copied!
Sign in / Sign up
24
Shares

குழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெய்கள்

தாயின் கருவறையில் ஒன்பது மாதங்கள் இருந்த பின்னர், பிரசவத்துக்கு பின் கடுமையான சூழ்நிலைக்கு குழந்தைகள் உள்ளாக்கப்படுகின்றன. உங்கள் குழந்தை சூழ்நிலைக்கு ஏற்ப மற்றும் ஆரோக்கியமாக வளரவும், கூடுதல் பாதுகாப்பு மற்றும் சத்துக்கள் தேவைப்படுகின்றன. ஒரு மென்மையான மசாஜ், உங்கள் குழந்தைகளுக்கு, வலுவான எலும்புகள் மற்றும் சதைகள் உருவாக்குவது மட்டுமல்லாமல் ஆழந்த உறக்கம், மகிழ்ச்சியான நாளை தர கூடியதாகும். குழந்தைகளுக்கு மசாஜ் கொடுப்பதை விட அதற்கு உபயோகப்படுத்தும் எண்ணையை தேர்தெடுப்பது முக்கியம். இதோ குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய உபயோகப்படும் சில எண்ணெய்கள் பற்றி பார்க்கலாம். 

1 தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் வெப்பமான கோடை மற்றும் ஈரப்பதமான காலநிலைகளில் சிறந்த தேர்வாகும்.

மென்மையாக இருப்பதால், சருமத்தில் எளிதில் உட்கொள்ளப்பட்டு, உடம்பிற்கு குளிர்ச்சி அளிக்கிறது.

சென்சிடிவ் சருமம் மற்றும் எக்ஸிமா, அரிப்பு மற்றும் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

குளித்த பின், சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவினால், குழந்தைகளுக்கு சருமம் ஈரப்பதத்துடனும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.

உங்கள் குழந்தைக்குக்கான சிறந்த தேர்வு  தேங்காய் எண்ணெய், குழந்தைகளுக்கு இயற்கையின் வரம் தேங்காய் எண்ணெய் என்றே சொல்லலாம்.

2 எள் எண்ணெய்

குழந்தை மசாஜ் எண்ணைகளில் எள் மிகவும் முக்கியமான மூலப்பொருள் ஆகும்.

கருப்பு எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை தேர்த்தேடுங்கள். இந்த எண்ணெயும் பிரபலமான ஆயுர்வேத குழந்தை மசாஜ் எண்ணெய் ஆகும்.

3 கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் உடம்பை சூடாக வைத்திருக்க உதவுவதால் குளிர் காலத்தில் குழந்தை மசாஜ்க்கு ஏற்ற எண்ணெய் ஆகும்.

வட மற்றும் கிழக்கு இந்தியாவில், கடுகு எண்ணெய் பூண்டு மற்றும் வெந்தயத்துடன் சேர்த்து சூடாக்க படுகிறது. பூண்டு எதிர்ப்பு சக்தியை தூண்டவும், வெந்தயம் குழந்தையின் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.

கடுகு எண்ணெயை கேரட் விதையுடன் சேர்த்து கொடுத்தால் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு சரி ஆகும்.

4 ஆலிவ் எண்ணெய்

குழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெய் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்று ஆகும்.

ஆலிவ் எண்ணெயை அவற்றின் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தும் பல எண்ணெய்கள் உள்ளன.

குழந்தையின் சருமத்தில் அரிப்பு, வெட்டு, எக்ஸிமா மற்றும் மற்ற அலர்ஜி இல்லாமல் இருத்தால் ஆலிவ் எண்ணெய் மிகவும் பாதுகாப்பானது.

5 பாதாம் எண்ணெய்

நிறைய மசாஜ் எண்ணெய்களில் பாதாம் எண்ணெய் முக்கியமான மூல பொருள் ஆகும்.

பாதாம் எண்ணெயில் வைட்டமின் E நிறைந்து உள்ளது.

குளிர் காலத்தில் குழந்தைக்கான சிறந்த மசாஜ் எண்ணெய் ஆகும். பாதம், ஆலிவ் மற்றும் காலெண்டுலா எண்ணெயின் கலவை ஆகும். இது சிறந்த குளியல் எண்ணெய்.

மேலே குறிப்பிட்டுள்ள மசாஜ் எண்ணெய்கள் எல்லா காலத்திலும் பயன்படுத்தக் கூடியதாகும். சிறந்த முடிவிற்கு, நீங்கள் இரண்டு அல்லது மூன்று எண்ணெய்களின் கலவையை பயன்படுத்தலாம். நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மற்றோரு விஷயம், மசாஜ் எண்ணெய் நல்ல தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்றது. குழந்தைக்கு நல்ல மசாஜ் அளியுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon