Link copied!
Sign in / Sign up
17
Shares

பெற்றோர்களே! குழந்தைகள் உணவு விஷயத்தில் நீங்கள் செய்யும் தவறை அறிவீரா!

பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளின் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவுகளை பார்த்து பார்த்து கொடுப்பார்கள். சில உணவுகளை குழந்தைகள் விரும்பி உண்வார்கள். சிலர் சாப்பிட மறுத்து அடம்பிடிப்பார்கள். இதனால் பெற்றோர் அவர்களை மிரட்டி உணவுகளை திணிப்பார்கள். இதில் அளவுகள் தெரியாமல் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார்கள். இது குழந்தைகளின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது. இங்கு குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் செய்யும் 5 தவறுகள் பற்றி பார்க்கலாம். 

1 தின்பண்டங்கள்

பெரும்பாலான பெற்றோர் செய்யும் முதல் தவறு குழந்தைகளுக்கு மாலை வேளைகளில் தின்பண்டங்கள் கொடுப்பது தான். மாலையில் கொடுக்கப்படும் தின்பண்டங்கள் இரவிற்குள் செரிக்காது, பின் குழந்தைகள் எப்படி இரவு உணவை சாப்பிடுவார்கள். அதற்காக மாலை நேரத்தில் ஏதும் கொடுக்க கூடாது என்று அர்த்தமல்ல. அளவாக கொடுக்க வேண்டும்.

2 உணவு தேவை

குழந்தைகள் சாப்பிடும் அளவு எப்போதும் குறைவாகவே இருக்கும். சில பெற்றோர்களுக்கு குழந்தைகள் எவ்வளவு உணவு சாப்பிடுவார்கள் என்றே தெரிவதில்லை. அளவிற்கு அதிகமாக கொடுப்பதால் குழந்தைகளின் உடல் எடை அதிகரித்து பல பிரச்சனைகள் மற்றும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

3 உணவு இடைவெளி

குழந்தைகளுக்கு சரியான இடைவெளியில் உணவு கொடுக்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு தினமும் காலை, மதியம் மற்றும் இரவில், காலை 11 அளவில் மற்றும் மாலை 5 அளவில் ஏதேனும் தின்பண்டங்கள் மற்றும் பழங்களை கொடுக்கலாம். நீங்கள் விரும்பு நேரத்தில் குழந்தைக்கு கொடுக்காமல், அவர்களுக்கு பசிக்கும் போது வேண்டிய அளவில் கொடுப்பது சிறந்தது.

4 ஆரோக்கியமான உணவுகள்

குழந்தைகளுக்கு எப்போதும் ஆரோக்கியமான உணவை வீட்டில் சமைத்து கொடுப்பதே சிறந்தது. வெளியில் வாங்கி கொடுக்கும் உணவுகள் சுகாதாரமற்றதாய் இருக்கும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

5 சரியான நேரத்தில் உணவு

குழந்தைகளுக்கு சரியான இடைவெளியில் உணவு கொடுக்க வேண்டியது அவசியம். கட்டாயம் காலை உணவை 8 - 9 மணிக்குள் கொடுக்க வேண்டும். காலை 11 மற்றும் மாலை 5 மணிக்கு குறைவான கலோரிகள் கொண்ட தின்பண்டங்கள் கொடுக்க வேண்டும். மதிய உணவை 1 மணிக்கு கொடுக்கலாம். இரவு உணவையும் 8 - 9 மணிக்குள் கொடுக்கலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon