Link copied!
Sign in / Sign up
14
Shares

குழந்தைகளின் விக்கலை நிறுத்தும் வழிகள்

உங்கள் குழந்தைகள் பிறந்ததிலிருந்து, வளரும் வரை நீங்கள் அவர்களை கவனித்து கொள்ள வேண்டும். அவர்களது தேவைகள் அறிந்து செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படும் போது நீங்கள் கவலை கொண்டாலும், அது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. உதரவிதானம் சுருக்கம் மற்றும் குரல் நாண்கள் விரைவாக மூடுவதால், குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவை உங்கள் குழந்தையின் தினசரி நடவடிக்கைகளால் ஏற்படுகின்றன. உங்கள் குழந்தைக்கு விக்கல் எடுப்பது அசௌகரியம் என நீங்கள் அதை சரி செய்ய முயற்சித்தால், இதோ உங்களுக்கான எளிய 5 வழிகள்.

1 குழந்தையை ஏப்பம் விட செய்யுங்கள்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு உணவு அல்லது பால் கொடுக்கும் போது,  விக்கல் ஏற்பட துவங்கினால், நீங்கள் அவற்றை சிறிது நேரம் நிறுத்த வேண்டும். பின் உங்கள் குழந்தையை ஏப்பம் விட செய்ய வேண்டும். இது விக்கலை ஏற்படுத்தும் கூடுதல் வாயுவை வெளியிடும். நீங்கள் உங்கள் குழந்தையை ஒரு மார்பகத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றும் போது அல்லது உங்கள் குழந்தை புட்டிப்பாலில் பாதி குடித்த பிறகும், உங்கள் குழந்தையை ஏப்பம் விட செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

2 தாய்ப்பால் கொடுக்கவும்

உதிரவிதானத்தில் ஏற்படும் எரிச்சலால் தான், விக்கல் ஏற்படுகிறது. இதை நிறுத்த சிறிய அளவு தாய்ப்பால் குடிப்பது, உதிரவிதானத்தில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்ய உதவுகிறது. உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறக்க செய்ய, உங்கள் குழந்தைக்கு மசித்த வாழைப்பழம் போன்று எதாவது சாப்பிட கொடுக்கலாம். உணவு விழுங்கும் முறை மட்டுமே இவற்றை கட்டுப்படுத்த முடியும்.

3 தேன் இரப்பர்கள்

உங்கள் குழந்தைகள் தாங்களாகவே விக்கல் எடுக்க துவங்கினால், அப்போது அவர்களின் வாயில் தேன் இரப்பர்களை வைப்பது சிறந்தது. இது உத்திரவிதானத்தை சரி செய்ய உதவுகிறது. சிலர் இதில் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து கொடுக்கிறார்கள். எனினும், இது அறிவியல் ரீதியாக பரிந்துரைக்கப்படவில்லை.

4 ஓமத்திரன் (Gripe water )

இது முழுவது நீர் மற்றும் மூலிகைகளின் கலவையால் செய்யப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு குடல் அசௌகரியத்தை சரி செய்ய பயன்படுகிறது. நீங்கள் விக்கலை நிறுத்த சிறிய அளவில் இதை பயன்படுத்தலாம். இது 50 சதவீதம் மட்டுமே பயனளிக்கும், ஆனால் குழந்தைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

5 காத்திருப்பு

இவை எல்லாம் பயனளிக்காத போது, நீங்கள் விக்கல் நிற்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அவைகளாகவே நிறுத்தப்படும். விக்கல் என்பது வேறு எந்த ஒரு நோய்க்கான அறிகுறியும் அல்ல. ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon