குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக வயிற்று வலி ஏற்படலாம். நடு இரவில் கூட ஏற்படும். அந்த சமயத்தில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது சற்று கடினமான ஒன்று தான். அது போன்ற தருணங்களில் என்ன செய்வது என்பதே நம் கவலையாக இருக்கும். உங்கள் கவலையை போக்கவே, குழந்தைகளின் வயிற்று வலியை சரி செய்யும் 10 வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
1 செவ்வந்தி பூ தேநீர்
செவ்வந்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வயிற்று வலியை குணமாக்கும் மற்றும் வலியை குறைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
தயாரிக்கும் முறை :
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி செவ்வந்தி மலர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றி மூடி விடுங்கள். சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் குழந்தைக்கு கொடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மகரந்த தூள்களுக்கு அலர்ஜி இல்லையெனில் அவர்களும் குடிக்கலாம். செவ்வந்தி மலர்களுக்கு பதிலாக செவ்வந்தி தேநீரை பயன்படுத்தலாம். குழந்தையின் வயிற்று வலி குணமாகும் வரை ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தடவை கொடுக்கலாம்.
2 சோயா பொருட்கள்
சில நேரங்களில் குழந்தைக்கு கொடுக்கும் மாட்டுப்பாலில் உள்ள புரதத்தினாலும் குழந்தைக்கு வயிற்று வலி வர வாய்ப்புள்ளது. இந்த புரதம் பவுடர் பாலில் மற்றும் தாய்ப்பாலில் இருக்கும். அதனால் குழந்தைக்கு பால் கொடுப்பதை சிறிது காலம் தவிர்த்திடுங்கள். ஒரு 2 வாரங்களுக்கு குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக சோயா பொருட்களை கொடுக்கலாம். இப்படி செய்தால் 3-4 நாட்களில் குழந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
3 தண்ணீர்
உங்கள் குழந்தையை ஓடும் தண்ணீரின் சத்தத்தை கேட்க வையுங்கள். இது தான் மிகவும் சுலபமான முறையாகும்.
செய்முறை :
ஒரு கிண்ணத்தை எடுத்து சமையல் அறையில் பாத்திரம் கழுவும் இடத்தில் வையுங்கள். பின் தண்ணீரை திறந்து விட்டு குழந்தையை அதன் அருகில் பிடித்து சத்தத்தை கேட்க வையுங்கள். இல்லையெனில் குளியல் அறையில் இதை முயற்சி செய்யலாம். தண்ணீரின் சத்தம் குழந்தையின் மனதையும் உடலையும் சாந்தப்படுத்தும். இல்லையேல் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு குழந்தையின் வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்.
4 புதினா
புதினாவில் குழந்தையின் வயிற்று வலியை போக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.
செய்முறை :
ஒரு தேக்கரண்டி காய்ந்த புதினா இலைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றி மூடி விடுங்கள். சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் குழந்தைக்கு கொடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இதை குடிக்கலாம். குழந்தையின் வயிற்று வலி குணமாகும் வரை இதை கொடுக்கலாம்.
5 துளசி
துளசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில் அதிக அளவில் உள்ள மருத்துவ தன்மை வயிற்று வலியை போக்க உதவுகிறது.
செய்முறை :
ஒரு தேக்கரண்டி துளசி இலைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றி மூடி விடுங்கள். சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் குழந்தைக்கு கொடுங்கள். குழந்தையின் வயிற்று வலி குணமாகும் வரை இதை கொடுக்கலாம்.
6 மிளகுக்கீரை (பெப்பர் மின்ட்)
மிளகு தண்ணீர் காலங்காலமாக வயிற்று வலியை போக்க பயன்படுத்தபடும் ஒன்று. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இது சிறந்த நிவாரணம் அளிக்கும்.
செய்முறை :
ஒரு தேக்கரண்டி மிளகு கீரையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றி மூடி விடுங்கள். சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்பு அந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் குழந்தைக்கு கொடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இதை குடிக்கலாம். குழந்தையின் வயிற்று வலி குணமாகும் வரை இதை கொடுக்கலாம்.
7 மசாஜ்
குழந்தையின் வயிற்றில் மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தையின் முட்டியை மெதுவாக வயிற்றை நோக்கி மடக்கி விட்டு கொண்டே இருங்கள். குழந்தைகள் அழும் போது நிறைய காற்றை உள்ளிழுத்து கொள்வார்கள். அதனால் கூட வயிற்று வலி ஏற்படலாம். மசாஜ் செய்வதால் வயிற்றில் இருக்கும் காற்று வெளியேறி விடும். அல்லது வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்டினாலும் வயிற்றுவலி குணமாகும்.
8 ஏப்பம்
பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகள் நிறைய காற்றை உள்ளிழுத்து கொள்வார்கள். பால் குடித்து முடித்ததும் பெற்றோர் அவர்களுக்கு ஏப்பம் வரும் வரை தோளில் போட்டு தட்ட வேண்டும். இல்லையெனில் காற்று உள்ளே இருந்து குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனால் குழந்தை பால் குடித்ததும் ஏப்பம் வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
9 குடல் வழி மருந்து (Gripe water)
இது, குழந்தையின் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சிறந்த மருந்துகளில் ஒன்று.
செய்முறை :
இது செவ்வந்தி பூ, புதினா, இஞ்சி போன்ற பல மூலிகைகளால் செய்யப்பட்டது. இந்த மூலிகைகள் எல்லாம் வயிற்றுவலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். கிரைப் வாட்டர் மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
10 பிற மூலிகை நிவாரணங்கள்
உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலோசனை பெற்று கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளையும் குழந்தைக்கு கொடுக்கலாம்.
பெருஞ்சீரகம் : இது குடல் சம்மந்தமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும்.
இஞ்சி : இது குமட்டல் மற்றும் ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏற்றது.
கற்றாழை : இதை வாயு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரவாரணம் அளிக்கும்.
எலுமிச்சை : இதுவும் வாயு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏற்றது.
