Link copied!
Sign in / Sign up
15
Shares

குழந்தைகளின் வயிற்றுபோக்கிற்கான காரணங்களும், தவிர்க்கும் முறைகளும்

குழந்தைகள் - மனிதகுலத்திற்கான கடவுளின் பரிசு, உங்களால் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்க வந்தவர்கள். அவர்கள் உங்கள் கண்கள் மற்றும் உங்களால் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த வந்தவர்கள். இந்த கருத்தின் படி, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு, கவனத்துடன் கையாள வேண்டும். இது வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான பிரச்சனைகள் உட்பட எல்லா பிரச்சனைகளுக்கும் பொருந்துகிறது. இப்போது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பற்றி பார்க்கலாம். 

வயிற்றுப்போக்கு என்றால் என்ன?

வயிற்றுபோக்கு என்பது உங்கள் குழந்தை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக மலம் கழிப்பது, இயல்பை விட நீர் சார்ந்த தன்மை மலத்தில் அதிகமாக காணப்படும்.

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதற்கான மற்ற அறிகுறிகள் :

வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் பல இருந்தாலும், நீங்கள் உங்கள் குழந்தையின் மலத்தை கவனிக்க வேண்டும். அது இயல்பை விட நீர் சார்ந்த தன்மை அதிகமாகவோ, வெளிர் நிறத்தில் காணப்படும். மேலும் உணவு பழக்கங்களில் மாற்றம் (குறைந்து சாப்பிடுவது), வாந்தி மற்றும் நீர்ப்போக்கு போன்றவையும் ஏற்படும்.

நீர்ப்போக்கை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அது மிக மோசமான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகள்.:

1. உலர்ந்த உதடுகள்

2. வாய் உலர்ந்து காணப்படுவது

3. கண்ணீர் இல்லாமல் அழுதல்

4. சோம்பல் அல்லது ஆற்றல் இல்லாமை

5. சோர்வடைந்த கண்கள்

6. எரிச்சல்

குழந்தைகளில் வயிற்றுபோக்குக்கான காரணங்கள் :

வைரஸ்கள், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், உணவு வகைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல காரணிகள் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாக உள்ளன.

குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ரோட்டாவைரஸ். பொதுவாக குழந்தைகள் தொடும் பொம்மைகள் மற்றும் இதர பொருட்கள், மேலும் மலவாய் வழியாகவும் இது பரவுகிறது. வைரல் தொற்று பொதுவாக இரைப்பைக் குடல் அழற்சிக்கு வழிவகுக்கிறது, இது வாந்தியுடன் சேர்ந்து இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். குழந்தைகளுக்காக வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு ரோட்டாவைரஸ் மட்டும் காரணம் அல்ல. இது பல்வேறு வைரஸ்கள் (அடினோவைரஸ், கால்சி வைரஸ், ஆஸ்ட்ரோவைரஸ் மற்றும் இன்ஃப்ளூபென்ஸா), பாக்டீரியா (சால்மோனெல்லா, ஷிகெல்லா, ஸ்டாலிஹோகோகாக்கஸ், காம்பிலோபாக்டெர் அல்லது ஈ.கோலை) மற்றும் ஒட்டுண்ணிகள் (ஜியார்டியாஸிஸ்) ஆகியவற்றினாலும் ஏற்படலாம்.

பாக்டீரியா தொற்றுக்கள் மலத்தில் இரத்தம், வயிற்றுப் பிண்டங்கள் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கு மற்றொரு காரணம் உங்கள் குழந்தை எடுத்துக்கொள்ளும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளாகவும் (antibiotics) இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(antibiotics) குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிப்பதால் பாக்டீரியா, ஒட்டுண்ணி அல்லது வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தை ஒரு குறிப்பிட்ட வகை உணவுக்கு ஒவ்வாமை இருந்தால் உணவு பழக்கம் கூட வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

சிகிச்சை முறைகள் :

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வயிற்றுப்போக்கு மிக லேசானதாக இருக்கும். அப்போது இதற்கு பெரிதாக மருத்துவ கவனிப்பு தேவையில்லை. அவர்களுக்கு நீர்ப்போக்கு போவதை தவிர்க்க, அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் படி செய்ய வேண்டும். மேலும் சர்க்கரை பொருட்களை தவிர்க்கவும், சர்க்கரை குடலின் உள்ளே தண்ணீரை ஈர்ப்பதால், அது நிலைமையை மோசமடைய செய்கிறது.

கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளை பொறுத்தவரை, தயிரை அவர்கள் உணவில் சேர்த்து கொடுக்கலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டிரியாக்கள் வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவும். மேலும் கடுமையான நீர்ப்போக்குடன் கூடிய வயிற்றுபோக்கு ஏற்பட்டால், எலக்ட்ரோலைட் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். நீர்ப்போக்கு மற்றும் வயிற்றுபோக்கு அதிகமாக இருக்கும் போது, உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்வது சிறந்தது.

தவிர்க்கும் முறைகள் :

குழந்தைகளில் வயிற்றுப்போக்கு சமாளிக்க சிறந்த வழி அதை தடுப்பதே. சில எளிய விஷயங்களை நினைவில் வைத்து கொண்டாலே இதைச் செய்யலாம்.

- எப்போதும் உங்கள் குழந்தையின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவும் மற்றும் குழந்தையுடன் ஒன்றி இருக்கும் பொருட்கள், குழந்தையின் பெற்றோர் என அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும்.

- உங்கள் குழந்தையை கவனித்து கொள்ளும் போது, உங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஊட்டும் உணவு நன்கு கழுவி, நன்றாக வேக வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

- உங்கள் குழந்தை வாயில் வைக்கும் பொருட்கள், பொம்மைகள், கைகள் மற்றும் அவர்கள் வையில் வைக்கும் அளவில் கிடைக்கும் பொருட்கள் என அனைத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

- உங்கள் குழந்தைக்கு சீரான உணவு கொடுப்பதுடன், நீர் சத்தும் உடலில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

இந்த முறைகளை கையாண்டு உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாக வைத்து கொள்வதன் மூலமாக நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். மாதம் பத்து சுமந்து பெற்ற மழலை செல்வத்தை, உடல்நல குறைவின்றி காப்போமாக!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon