Link copied!
Sign in / Sign up
8
Shares

குழந்தைகளின் வயிற்று வலி குறித்த சில மூடநம்பிக்கைகள்

இந்த நவீன காலத்திலும் மனித வாழ்வில் மூடநம்பிக்கை என்பது நிறைந்து காணப்படுகிறது. எதிலும் இருக்கும் மூடநம்பிக்கைகள் குழந்தைகள் விஷயத்திலும் நம்பப்படுகிறது. குழந்தைகள் குறித்த மூடநம்பிக்கைகள் பற்றி பார்க்கலாம்.

1 முதல் நம்பிக்கை

குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டால் அதிகளவு கிரைப் வாட்டர், மூலிகை தேனீர், ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

உண்மை

குழந்தைகளின் மலம் சாதாரணமாக இருந்தால் வயிற்று வலி இல்லை என்று அர்த்தம். எனினும், மலம் தண்ணீயாகவோ அல்லது ரத்தம் கலந்தோ அல்லது கடினமாக இருந்தாலோ வயிற்றில் கோளாறு என்று அர்த்தம். இது பால் அல்லது பாலில் உள்ள புரதத்தால் ஏற்பட்டிருக்கலாம். இதனை சரி செய்ய பாலை மாற்ற வேண்டும் அல்லது தாயின் சாப்பாட்டு முறையை மாற்ற வேண்டும். குழந்தையின் செரிமான அமைப்பில் பிரச்சனை இருந்தால் தான் இந்த மாற்றங்கள் பயனளிக்கும். அதற்கு மாறாக மலம் வழக்கமான நிறத்தில் இருந்தாலோ அல்லது குழந்தையின் எடை கூடினாலோ செரிமான அமைப்பில் பிரச்சனை இல்லை என்று அர்த்தம்.

2 இரண்டாவது நம்பிக்கை

குழந்தையின் வயிற்று வலிக்கு வாயு கோளாறே காரணம்.

உண்மை

இதனால், வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்ய குழந்தைக்கு மருந்து கொடுப்பார்கள். குழந்தைகள் இதற்கான அறிகுறியான சாப்பாட்டை கக்கவில்லை என்றால், இந்த சிகிச்சையெல்லாம் பலனளிக்காது. குழந்தைகள் அதிகமாக கக்கினால் அவர்கள் குடல் அழற்சி சீர்குலைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், விசித்திரமான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். இந்த பிரச்னையை நல்ல உணவுகள் மற்றும் சன்டாக் அல்லது மைலந்தா போன்ற மருந்துகளால் சரிசெய்யலாம்.

மேலும் தாய்ப்பாலூட்டும் போது குழந்தையின் நடவடிக்கைகளை கவனியுங்கள். குழந்தை பாலை கக்கினாலோ அல்லது பால் குடிக்க மறுத்தாலோ கண்டிப்பா அதற்கான சிகிச்சை தேவை.

3 மூன்றாவது நம்பிக்கை

குழந்தை சோர்வாக இருப்பதற்கு மலச்சிக்கலே காரணம்.

உண்மை

பொதுவாக குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாது. சில குழந்தைகள் மலம் கழிக்க பல நாட்களை எடுத்துக்கொள்வார்கள். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பொழுது. ஆனால் மலம் சாதாரணமானதாக தான் இருக்கும். இக்குழந்தைகளுக்கு நன்றாக தான் இருப்பார்கள். பொதுவாக குழந்தைகள் சிரமத்துடன் மலம் கழித்தால் பெற்றோர்கள் அதை மலச்சிக்கல் என்று எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இதற்கு மலச்சிக்கல் காரணம் அல்ல. குழந்தைகளுக்கு மலம் கழிக்க தெரியாததால் வெளிப்படுத்தும் உணர்வு.

குழந்தைகளின் மலம் பெரியவர்களின் மலம் போல் இருந்தால் தான் மலச்சிக்கல் என்று அர்த்தம். இதனால் வாயு, வயிற்றி வலி, அசௌகரியம் ஆகியவை ஏற்படலாம். இதை சரி செய்ய குழந்தைகளுக்கு அதிகளவு நீராகாரம் கொடுக்க வேண்டும். இந்த சிகிச்சை சரி வரவில்லை என்றால், வேறு காரணங்களை பார்க்க வேண்டும். பொதுவாக இது மரபணு காரணத்தால் ஏற்படுபவை. குழந்தைகளின் மலம் கடினமாக இல்லாமல் சாதாரணமாக இருந்தால் வேறு காரணங்களை ஆராயுங்கள்.

4 நான்காவது நம்பிக்கை

குழந்தைகள் விசித்திரமாக நடந்து கொண்டால் ஏதோ பிரச்சனை உள்ளது.

உண்மை

பெற்றோர்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சில குழந்தைகளை புரிந்துகொள்ளவே முடியாது. ஒவ்வொரு குழந்தையின் நடத்தையும் வேறுபடும். சில குழந்தைகளின் நடத்தை எரிச்சலூட்டுவதாக இருக்கும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சில குழந்தைகள் நம்மிடம் வந்தாலும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகளோ நாம் பார்த்தாலே அழ ஆரம்பித்து விடுவார்கள். என்ன செய்தாலும் அவர்களை சமாதானப்படுத்த முடியாது. இவர்கள் பெற்றோர்களை பாடாய் படுத்துவார்கள். இதில் பெற்றோரை குற்றம் சொல்ல முடியாது.

சில குழந்தைகள் காலை முதல் மாலை வரை நன்றாக இருப்பார்கள். ஆனால் 6 மணிக்கு மேல் காரணம் இல்லாமல் அழ ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் தொடர்ந்து பல மணி நேரங்கள் அழுதுகொண்டே இருப்பார்கள். என்ன செய்தாலும் இவர்களை சமாதானப்படுத்த முடியாது. அதே சமயம் எதுவும் தப்பாகவும் இருக்காது. நள்ளிரவு வரையில் அடி தொண்டையிலிருந்து அழுதுகொண்டே இருப்பார்கள். இந்த பழக்கம் தாய் அல்லது தந்தையிடம் இருந்து குழந்தைக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், இது சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும். இது சில வாரங்களில் தானாகவே சரியாகி விடும்.

உங்கள் குழந்தை அசௌகரியமாக உணர்ந்தால் அதற்கு உடல் பிரச்சனை தான் காரணமாக இருக்க வேண்டும் என்றில்லை. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பாருங்கள். ஆரோக்கியமாக இருந்தால் அவர்களின் விசித்திர நடத்தையை எண்ணி கவலைப்பட வேண்டாம். எல்லாம் சில வாரங்களில் சரியாகி விடும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon