Link copied!
Sign in / Sign up
10
Shares

குழந்தைகளின் வயதிற்கேற்ற உணவுகள்

குழந்தை வளர்ப்பு பற்றி சிந்தனைகள் குழந்தை கருவில் இருக்கும் போதிலிருந்தே துவங்கி விடும். குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுவது அவர்களுக்கு கொடுக்கும் உணவுகள். குழந்தையின் எந்த வயதில் என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சத்தான உணவே அவர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இங்கு குழந்தைகளின் வயதிற்கேற்ற உணவுகளை பற்றி பார்க்கலாம்.

முதல் நான்கு மாதங்கள்

குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் நிறைந்திருக்கிறது. அவர்களின் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாய்ப்பால் வலுவடைய செய்கிறது. இது அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றுகிறது. குழந்தைக்கு குறைந்தது நான்கிலிருந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது அவர்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, அவர்களின் செரிமான மண்டலமும் சரிவர செயல்பட துவங்கும்.

நான்கு முதல் ஆறு மாதங்கள்

குழந்தையின் நான்கு மாதங்களுக்கு பிறகு, அவர்கள் மற்ற உணவுகள் சாப்பிட ஆர்வம் காட்டினால், சிறிதளவு வேக வைத்து மசித்த காய்கறிகள் மற்றும் கிழங்குகளை கொடுக்கலாம். உருளை கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தை கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம்.

ஆறு முதல் எட்டு மாதங்கள்

ஆறு முதல் எட்டு மாதங்களில் மசித்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சற்று கூடுதலாகவே கொடுக்கலாம். இப்போது அதனுடன் சேர்த்து நன்கு வேக வைக்கப்பட்டு மசிக்கப்பட்ட சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை கொடுக்கலாம். தினமும் இரண்டு முதல் மூன்று முறை தாய்ப்பால் மற்றும் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க துவங்கலாம். காய்கறிகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் அவற்றை தனியாக குழந்தைகளுக்கு கொடுத்து ஏதும் அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து பின் கொடுக்கவும்.

எட்டு முதல் பத்து மாதங்கள்

எட்டு முதல் பத்து மாதங்களில் பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை நன்கு வேக வைத்து கொடுக்கலாம். அத்துடன் புரதம் நிறைந்த உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

பத்து முதல் பனிரெண்டு மாதங்கள்

இந்த மாதங்களில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் கவனம் இருக்க வேண்டும். அவர்களுக்கு அளவிற்கதிகமாக கொடுக்காமல், போதுமான அளவு உணவை மட்டுமே கொடுக்க வேண்டும். அதாவது சிறிதளவு பால்பொருட்கள் அல்லது பாலாடைக்கட்டி உடன் சாதம், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon