Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளின் வளர்ச்சியில் உதவும் 3 கை வேலைப்பாட்டு பொருட்கள்..!

குழந்தை வளர்ப்பில், என்னதான் நீங்கள் அளிக்கும் பாசம், நேசம், உணவு, பராமரிப்பு போன்றவை முக்கியமாக இருந்தாலும், சில புதுமையான செயல்களும் குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக அமைகின்றன. அந்த அத்யாவசிய பொருட்களில், தாய் செய்யும் காய் வேலைப்பாடு பொருட்கள் தான் முக்கியமானவை..! அவற்றை பற்றி, இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

1. ஸ்வெட்டர்..!

குழந்தைக்கு என தாய் தன் கையால், பின்னிக் கொடுக்கும், ஸ்வெட்டர், குல்லா போன்றவை குழந்தைக்கு தாயின் அரவணைப்பை உணர்த்தும்; மேலும் அவற்றை வண்ண வண்ண நிறங்களில் உருவாக்கினால், குழந்தை அந்நிறங்களைக் கண்டு மகிழும்..

2. படங்கள்..!

தாய் தன் குழந்தையுடன் சேர்ந்து காகிதத்தில், வண்ண நிறங்களில் ஏதேனும் வரைய முயலலாம்.. அல்லது நீங்கள் வரைந்த ஓவியங்களை குழந்தைக்கு காண்பிக்கையில், குழந்தையின் கற்பனைத் திறன் மலரத் தொடங்கும். மேலும் வண்ணங்களில் குழந்தையின் கைகளை வைத்து அவற்றை காதத்திலோ அல்லது சுவற்றிலோ அழகு ஓவியங்கள் வரும் வகையில் அமைக்கலாம்.. இவை குழந்தையின் மன வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும்…

3. வேலைப்பாடுகள்..

சிப்பிகள் அல்லது வேறுவகை பொருட்கள் கொண்டு, கதவு மற்றும் ஜன்னல்களில், குழந்தையின் தொட்டில் மேல், குழந்தையின் அறையில் என சப்தங்கள் எழுப்பும், அழகான வேலைப்பாடுகள் நிறைந்த தொங்கல்களை தயாரித்து, உபயோகிக்கலாம். இவை குழந்தையின் கவனத்தை கவர்ந்து, மனோசக்தியை மேம்படுத்தும்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon