Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சிகள்..!

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அவர்களின் ஓய்வு நேரத்தில் சரியான செயல்களில், ஏதேனும் கற்றுக்கொள்ளும் வகையில் சில கூடுதல் கல்வி நடவடிக்கைகள் அதாவது extra curricular activities-ல் அவர்களை சேர்த்து விடவும். இதனால், குழந்தைகளால் தங்கள் ஓய்வு நேரத்தை நல்வழியில் செலவிட இயலும்; மேலும் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் இயலும். 

குழந்தைகள் குள்ளமாக இருந்தால், அவர்களை உயரமாக்க சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன; அந்த உடற்பயிற்சிகளை குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் கற்றுக்கொண்டால், அவர்கள் புதிய விஷயங்கள் கற்றுக்கொள்ளுதல் மற்றும் உயரம் அதிகரித்தல் என இரண்டு இலக்கையும் எட்டலாம்..! இது 'ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போல' இரண்டையும் ஒரே செயலாக முடிக்கலாம்..!

நீச்சல்  

நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகையில், குழந்தைகளின் உடல் மொத்தமும் நன்கு விரியும்; இது குழந்தைகள் சீராக உயரமாக உதவும். எனவே, குழந்தைகள் தினமும் இப்பயிற்சியில் ஈடுபட வேண்டும்..!

தொங்குவது

இந்த பயிற்சி அனைவரும் அறிந்ததே! தொங்கு ராஜா தொங்கு என குழந்தைகள் தங்கள் உயரத்தைக் கூட்ட கம்பிகளில் தொங்குவதை, விளம்பரங்களில் நாம் கண்டதே! இவ்வாறு கம்பியை பற்றிக்கொண்டு தொங்குவதால், குழந்தைகளின் உடல் விரிந்து, நீட்சியடைந்து அவர்களின் உயரம் அதிகரிக்க உதவும்.

கோப்ரா ஸ்ட்ரெச்சிங் 

இப்பயிற்சி குழந்தைகளின் தண்டுவடத்தை நீட்டிக்க உதவுகிறது; இதைத்தொடர்ந்து செய்து வந்தால், குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும். குழந்தைகள் கைகளை கீழே ஊன்றி, தங்கள் தோள்பட்டையை மட்டும் முடிந்தளவு மேலே உயர்த்த வேண்டும்; இப்பயிற்சி செய்கையில், குழந்தையின் முகம் நேராக பார்க்குமாறு இருக்க வேண்டும்.

ஸ்கிப்பிங் 

ஸ்கிப்பிங்கை தினசரி செய்து வந்தால், இது குழந்தைகளின் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடலுக்கு பலம் தந்து, குழந்தைகளின் உயரம் அதிகரிக்க உதவுகிறது.

இவற்றோடு, தினந்தோறும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி போன்ற யோகாப்பயிற்சிகளை செய்து வந்தால் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் நல்ல ஊட்டம் மற்றும் உறுதி கிடைத்து, குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon