Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தைகளின் உடல் எடையை குறைக்கும் ஆரோக்கிய பொடி..!

குழந்தைகளுக்கு அவர்களின் தேவையை விட அதிகமான உணவுகளை நீங்கள் அளித்து அவர்கள் உடல் எடை கூடியிருந்தாலோ அல்லது அவர்கள் உணவின் சுவைக்கு அடிமையாகி அதிகம் உண்டு உடல் எடை அதிகரித்திருந்தாலோ அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் நல்லதல்ல. ஏனெனில் உடல் எடை அதிகமிருந்தால், குழந்தைகளால் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்பட இயலாது.

மேலும் இது அவர்களை எதையும் கற்கவிடாமல் சோம்பேறியாக்கிவிடும். ஆகையால், குழந்தைகளின் அதிகப்படியான உடல் எடையை, ஆயுர்வேத ஆரோக்கிய முறையில் குறைத்து அவர்களை சரியான உடல் எடை கொண்டிருக்க செய்வது எப்படி என இப்பதிப்பில் பார்க்கலாம்..

தேவையானவை..

ஆளி விதை - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், சீரகம் - 100 கிராம் 

செய்முறை

1. மேற்குறிப்பிட்டுள்ள பொருட்கள் அத்தனையையும் நன்றாக பொடித்துக் கொண்டு, குழந்தைகள் காலை துயில் எழுந்ததும் 1 தேக்கரண்டி அளவு அப்பொடியை வெற்று வயிற்றில் உண்ண வேண்டும். 

2. இதைச் சாப்பிட தொடங்கிய 10 நாட்களுக்குள் அரை கிலோ உடல் எடை குறைவதற்கு வாய்ப்புள்ளது; மேலும் இதை தோசை போன்ற உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.

குழந்தைகள் இந்த பொடியை தினம் உண்ணாவில் சேர்த்துக் கொண்டால், அவர்களின் உடல் நலத்தை மேம்படுத்த ஆளிவிதைகள், வெந்தயம், சீரகம் போன்றவை உதவும்; குழந்தையின் உடலுக்கு வெந்தயம் குளிர்ச்சி அளித்து அவர்களின் உடல் வெப்பநிலையை சம நிலைப்படுத்தும்; சீரகம் உடல் எடை மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்; ஆளிவிதை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது. இது பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனைக்கு பின் அளிக்கவும்.

குழந்தைகளுக்கு எதை கொடுப்பதாய் இருந்தாலும், சரியான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே அளிக்க வேண்டும்; அதுவே குழந்தைகளின் நலத்திற்கு நல்லது...!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon