Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளின் தொண்டை நோய்தொற்றுக்கான வீட்டு வைத்தியங்கள்..!

குழந்தைகளுக்கு கிரௌப்ஸ் எனப்படும் தொண்டையைச் சுற்றிய வீக்கம் மற்றும் காற்றுக்குழல்களில் அடைப்பு என்ற பிரச்சனைகள் பிறந்த குழந்தையின் ஆரம்ப காலத்திலிருந்து அவர்கள் திடமான நோய் எதிர்ப்பு சக்தி பெறும் வரை ஏற்படலாம். இந்நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன; அவை யாவை என இப்பதிப்பில் காணலாம்..!

1. ஆவி பிடித்தல்..!

குழந்தைகளுக்கு தொண்டை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகையில் அவர்களுக்கு சளி அல்லது காய்ச்சல் தொந்தரவு ஒரு பெரிய தொல்லையாக வந்து நிற்கும். அப்படி குழந்தைகள் இந்த நோய்தொற்றுகளால் அவதிப்படுகையில், அவர்களை விக்ஸ் போன்ற மருந்துகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, ஆவி பிடிக்குமாறு செய்யலாம்; இது குழந்தைகளில் இருக்கும் சளியை முற்றிலும் வெளியேற்றிவிட உதவும்..!

2. நீர்..!

குழந்தையின் உடல் நீர்ச்சத்து கொண்டதாய் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்; குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைந்தால், நோய்த்தொற்றுகள் எளிதில் ஏற்பட்டுவிடும், ஆகையால் பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்..!

3. கதகதப்பு..

குழந்தைக்கு தொண்டை ரீதியான நோய்தொற்று எதுவும் ஏற்பட்டிருந்தால், அச்சமயங்களில் குழந்தையை குளிர்காற்று எதுவும் தாக்காமல், நன்கு போர்வையால் போர்த்தி விட்டிருக்க வேண்டும்; குழந்தையின் உடல் எப்பொழுதும் கதகதப்புடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்..!

4. காய்ச்சல்..!

குழந்தைக்கு தொண்டை பிரச்சனையுடன், காய்ச்சலும் இருந்தால், முதலில் காய்ச்சலை குணப்படுத்த முயலுங்கள்; காய்ச்சல் குறைந்தாலோ குழந்தையின் உடலில் பழைய பலம் வரத்தொடங்கிவிடும்..! நெற்றியில் பத்து போடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்; காய்ச்சல் அதிகமிருந்தால் மருத்துவ உதவியை நாடுவது நல்லது..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon