Link copied!
Sign in / Sign up
23
Shares

குழந்தைகளின் தசையை வலிமைப்படுத்தும் 6 உடற்பயிற்சிகள்

உங்கள் குழந்தைகள் ஒரு சிறிய மென்மையான பந்தை போன்றவர்கள் மற்றும் அவரது உடல் இப்போது மிகவும் மென்மையானதாக இருக்கும். உங்கள் குழந்தை படுத்திருக்கும் போது பார்ப்பதற்கு, மிகவும் சாதாரண ஒன்றாக தோன்றலாம். ஆனால் உங்களுக்கு தெரியாமலே, ஏன் அவர்களையும் அறியாமலே அவர்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள் தெரியுமா. உங்கள் குழந்தைகள் பொருட்களை உதைப்பது போன்று காற்றில் செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் உற்சாகமாக உணர்கிறார்கள் அல்லது தங்கள் துணிகளை மாற்றும்போது அப்படி செய்வார்கள். அவர்கள் உண்மையில் தசைகளைப் பலப்படுத்தி கொள்கிறார்கள். இது அவர்களுக்கு எவ்வளவு நல்லது என்றால், அவர்களது இயக்க திறனை மேம்படுத்த அது உதவுகிறது. மேலும் குழந்தைகளின் தசையை வலிமை படுத்த உதவும் சில உடல் பயிற்சிகளை இங்கு பார்க்கலாம்.

1 சூப்பர்மேன் உடற்பயிற்சி

நீங்கள் தரையில் முதுகு புறமாக படுத்துக்கொண்டு, உங்கள் கால்களை வயிற்றுக்கு அருகில் கொண்டு வர வேண்டும். குழந்தையை உங்கள் கால்களை மீது அவர்களின் கால்களும், உங்கள் முகத்திற்கு நேராக முகமும் இருக்கும் படி வைத்து கொள்ள வேண்டும். அவர்களின் கைகளை இருபுறமும் நீட்டி பிடித்து, இதன் மூலம் அவர்கள் தலையை பின்னுக்கு நகர்த்தி, கைகளை பழைய நிலைக்கு கொண்டுவர முயல்வார்கள். இது உங்களுக்கான உடற்பயிற்சியும் கூட.

2 காற்றில் சைக்கிள் ஓட்டுதல்

இது உங்கள் குழந்தையின் வயிற்றில் சிக்கியிருக்கும் வாயுவை அகற்ற உதவுவதற்கான சிறந்த பயிற்சியாகும். வாயுவை வெளியேற்றும் இயற்கையான வழி மட்டுமல்ல. அது முழங்கால், கால்கள், இடுப்புக்கள் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள தசைகள் வளர்ச்சி மற்றும் நெகிழ்வு அடைய உதவுகிறது.

அம்மா உதவிக்குறிப்பு: பயிற்சிக்காக அதிக முயற்சிகளை சேர்க்க "கோவோ கோவோ" அல்லது "வேர்ரூம் ட்ரூம்" அல்லது வேறு ஏதாவது ஓசை போன்ற ஒலிகளை உருவாக்கவும். குழந்தைகள் உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதும், ஒத்துழைப்பதும், மிகவும் வேடிக்கையாக இருக்கும்!

3 கழுத்தை நீட்டுதல்

உங்கள் குழந்தையின் கழுத்து வலிமையானது மற்றும் மென்மையானது, மற்றும் அவர்களின் கழுத்து மகத்தான உடலின் எடையைக் தாங்குவதற்கு ஒப்பீட்டளவில் தளர்வாக இருக்கிறது. உங்கள் குழந்தை ஆறு வாரங்களுக்கு குறைவாக இருந்தாலும், அவர்களின் வயிறு கீழே இருக்கும் போது சில நொடிகள் தலையை உயர்த்துவார்கள். உங்கள் குழந்தையின் தலையை கழுத்து பகுதி தாங்க வேண்டும் என்பதால், இந்த உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. இது தசைகளை வலுப்படுத்தவும், உங்கள் குழந்தைக்கு சுற்றியுள்ள பொருட்களின் தன்மை சற்றே மாறுபடும் போது, கண்களை ஒருங்கிணைப்பதை மேம்படுத்தவும் உதவுகிறது.

4 திறந்து மூடுதல்

உங்கள் குழந்தையின் முதுகு தரையில் படும்படி படுக்க செய்து, அவர்களின் இரண்டு கைகளையும் பிடித்து கொள்ளுங்கள். அவர்களின் கைகளை விரிக்கவும், மூடவும் செய்யுங்கள். 5 நிமிட இடைவெளியில் சில முறை இந்த பயிற்சியை மீண்டும் செய்யவும். இது உங்கள் குழந்தையை எளிதாக்குவதற்கும், தங்கள் கைகளை நிதானப்படுத்துவதற்கும் மற்றும் பொருட்களை அடைய எப்படி எட்டி பிடிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள உதவும்.

5 தவழுதல்

உங்கள் குழந்தை 7 முதல் 10 மாதங்களில், அவர்களின் நான்கு கால்களால் தவழ துவங்கி விடுவார்கள். உங்கள் சிறிய சாகசக்காரர் முழக்கமிட்டு கொண்டு தங்கள் நான்கு கால்களால் நிற்க துவங்கி, இயக்கத்தை முன்னெடுக்க முன் மற்றும் பின் திசையில் நகர ஆரம்பிப்பார்கள். அவர்கள் அடிக்கடி கீழே விழுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால், எடையை எப்படி சமநிலையில் வைத்து நகர்வது என்பதை கற்றுக்கொள்வார்கள்.

6 நேராக மற்றும் மேலே

குழந்தைகள் நடக்க துவங்கும் முன்னே, உருள துவங்கிவிடுவார்கள். 8 முதல் 9 மாத குழந்தைகளிடம் நீங்கள் இதை காண முடியும். இதனால்  குழந்தைகள் அவர்களின் உடல் தசையை நெகிழ செய்ய மற்றும் கைகால்களை நீட்ட கற்று கொள்வார்கள். உடல் எடையை தாங்க கால்கள் பலப்பட வேண்டும் என்பதை புரிந்து கொல்வார்கள்.

இதற்கு தசைகள் நீண்டு, அவர்கள் தங்கள் உடல் எடையை எப்படி சமநிலை படுத்தி நிற்க வேண்டும் என்பதை கற்று கொள்வார்கள். உங்கள் குழந்தை கீழே விழுந்து அழும் போதெல்லம் மீண்டும் கீழே விழுந்து விட கூடாது என உணர்வார்கள். எனவே, இங்கே நீங்கள் எப்படி முழங்கால்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்பதைக் கற்பியுங்கள். உங்கள் குழந்தையை வழிகாட்டுங்கள் மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைக் காட்டுங்கள்.  

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon