Link copied!
Sign in / Sign up
32
Shares

குழந்தைகளின், சளி மற்றும் புண்ணுள்ள தொண்டையை சரிசெய்ய உதவும் 5 மருந்துகள்..!

குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில், அதிக கஷ்டத்தை அளிப்பது, இருமலும் சளியுமே. இந்த இரண்டாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அதிக அவதியுற நேரிடும். எனவே குழந்தைகளை இந்த நோய்களில் இருந்து காப்பது பெற்றோர்களாகிய உங்களது கடமை. குழந்தைகளின் சளி மற்றும் இருமலை விரட்ட உதவும் மருந்துகள் அல்லது வழிகள்  குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

1. ஓய்வு..!

குழந்தைகள் போதுமான அளவு ஓய்வு பெற வேண்டும். சளி ஏற்பட்டிருந்தால், தண்ணீரில் விளையாடுவதிலிருந்து குழந்தைகளை தடுக்கவும். மேலும் தண்ணீரை மாற்றி மாற்றி அளிக்காமல், காய்ச்சிய நீரை அளிக்கவும்.

குழந்தைகளை ரைம்ஸ் மற்றும் ஏதேனும் விளையாட்டு காட்டி, ஓய்வு நிலையிலேயே நேரம் கழிக்க உதவவும்..

2. ஆவி பிடித்தல்..!

குழந்தைகளை ஆவி பிடித்தலில் ஈடுபடுத்தி சளியை வெளியேற்ற முயலலாம். இதில் சூடாக காய்ச்சப்பட்ட நீரில், விக்ஸ் அல்லது துளசி, தூதுவளை போன்ற மருத்துவ குணம் கொண்ட, சளியை விரட்டும் இலைகளை சேர்த்து ஆவி பிடிக்க செய்யலாம். இது நல்ல பலன் தரும்.

3. திரவங்கள்..

அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஏற்றது.,

எப்படி உதவும்:

அதிகம் திரவ உணவுகளை உண்பது, சளி நன்கு வெளியேற உதவும். மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைக்க உதவும்..

என்ன தேவை:

1. மோர், தண்ணீர், பழச்சாறு அல்லது குழந்தைக்கு பிடித்த திரவ உணவுகள்

என்ன செய்வது:

குழந்தைகளை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். அடிக்கடி ஏதேனும் திரவ உணவுகளை அளித்து வரவும். இது சளி நன்றாக வெளியேற உதவும்.

குறிப்பு: குழந்தைக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டும் அளிக்கவும்; பின் மருத்துவ ஆலோசனையின் படி உணவு அளிக்கவும்.

4. உப்பு நீர், பல்ப் சிரஞ்ச்

இவை அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஏற்றது..,

எப்படி உதவும்:

குழந்தைகளுக்கு அதிகம் சளி பிடித்திருந்தால், என்ன முயன்றும் அவர்களின் மூக்கு வழியாக சளியை வெளியேற்ற முடியாத நிலையில் இது பெரிதும் உதவும்.

என்ன தேவை:

1. இரப்பர் bulb syringe

2. வீட்டில் தயாரித்த அல்லது கடையில் வாங்கிய உப்பு நீர்(saline drops)

குறிப்பு: சுத்தமான நீரினை காய்ச்சி பயன்படுத்தவும் அல்லது கடையில் வாங்கி பயன்படுத்தவும்; 24 மணி நேரத்திற்கு பின் மீண்டும் அந்நீரை உபயோகப்படுத்தாதீர். இது ஒரு நாளுக்கு மட்டுமே பயன்படுத்த உகந்தது.

என்ன செய்வது:

1. குழந்தையின் தலைக்கு நன்றாக முட்டுக் கொடுத்தபின், உப்பு நீரை குழந்தையின் மூக்குத்துவாரங்களில் ஓரிரு துளிகள் விடவும்; 30 நொடிகள் அல்லது அதற்கும் குறைவான நேரம் காத்திருக்கவும்.

2. பின் பல்ப் சிரஞ்ச் கொண்டு சளியை மூக்கிலிருந்து எடுக்கவும்; எடுத்த சளியை சிரஞ்சிலிருந்து அகற்றவும்.

3. சளி அதிகமிருந்தால், இந்த செய்முறையை மீண்டும் செய்யவும்.

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் செய்யவும். உப்பு நீர் இல்லாமல் கூட பல்ப் சிரஞ்ச் பயன்படுத்தி, சளியை வெளியேற்றலாம்.

5. தேன்

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும்..!

எப்படி உதவும்:

இது தொண்டைக்கு இதமான உணர்வை அளித்து, இருமல் ஏற்படுவதை தடுக்கிறது; மேலும் இது வறட்டு இருமலுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

என்ன தேவை:

1. தேன்

2. எலுமிச்சை

எப்படி செய்வது:

1/2-1 தேக்கரண்டி தேனினை வெந்நீரில் கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குழந்தைக்கு அளிக்கலாம். இது குழந்தைக்கு வைட்டமின் சி சத்துக்களை அளித்து, சளி போன்ற நோய்களிலிருந்து காக்கும்..! தொண்டைக்கு இதமாக இருக்கும்.

குறிப்பு:

1 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் அளிக்கக் கூடாது; அப்படி மீறி அளித்தால் அது குழந்தைகளுக்கு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு எந்த முறையை கடைபிடிப்பதாயிருந்தாலும், மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் செய்யவும்; இது குழந்தைக்கு நன்மை நடக்க உதவும்..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon