Link copied!
Sign in / Sign up
29
Shares

குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் 5 தவறுகள்

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய வழியில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். வீட்டில் நெருப்பு அலாரங்கள், குழந்தை பாதுகாப்பு வசதிகள், மற்றும் சிறிய குப்பைகள் அல்லது உண்ணகூடாத பொருட்களை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைப்பது என அனைத்தையும் செய்கிறார்கள். ஆனாலும் ஒரு சிறிய கவன குறைவு கூட மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும். அனைத்தும் அதிலிருந்து தவறாகி விடும். இப்போது அதிக படியான பெற்றோர் கவன குறைவாக செய்து ஆபத்தை ஏற்படுத்திய 5 விஷயங்களை பார்ப்போம்.

1 குழந்தைகளை தொட்டிகளின் அருகில் விட்டு செல்வது

பெரும்பாலான குழந்தைகள் இறப்பு இதனால் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறது ஒரு ஆய்வு. குழந்தைகளை திறந்திருக்கும் நிலத் தொட்டிகள், ஆழ் துளை கிணறு, கிணறு மற்றும் குளியல் தொட்டி போன்றவற்றிலோ அல்லது அருகிலோ தனியாக விட்டுவிட்டு எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு நிமிடம் கூட செல்ல கூடாது. யாராவது உங்கள் கதவை தட்டலாம் அல்லது அலைபேசி அழைப்பு என எதுவாக இருந்தாலும் நீங்கள் உங்கள் குழந்தையை தனியாக விட்டு செல்ல கூடாது. அப்படி நீங்கள் சென்று தான் ஆகா வேண்டும் எனும் போது, உங்கள் குழந்தையையும் உடன் அழைத்து செல்லுங்கள்.

2 குழந்தை தூங்கும் இடத்தில் இருக்கும் பொருட்கள்

உங்கள் குழந்தையை SIDS - லிருந்து பாதுகாக்க வேண்டும். அது என்ன SIDS என்றால், திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி. அதாவது உங்கள் குழந்தை தூங்கும் தொட்டிலில் உங்கள் குழந்தையை தவிர வேறு எந்த பொருளும் இருக்க கூடாது. அதாவது உங்கள் குழந்தையின் தொட்டிலில் பொம்மைகள், தலையணைகள் அல்லது வேறு எந்த குஷனிங் பொருட்களும் இருக்க கூடாது. இவை உங்கள் குழந்தைக்கு சுவாசத்தை தடுக்கும். எனவே உங்கள் குழந்தையின் தொட்டிலில் இருந்து இவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு சிறிய போர்வையை மட்டும் போர்த்திவிடுங்கள், அதுவும் அவர்கள் கழுத்து பகுதி வரை இருக்க கூடாது. அவர்கள் அதை முகத்திற்கு இழுத்துவிட கூடாது என்பதற்காக.

3 குழந்தையை கையில் வைத்து கொண்டு சூடான பானங்கள் அருந்துவது

பலர் இதை அறிந்திருப்பதில்லை, ஆனால் ஒரு ஆண்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மேல், இது போல் கொதிக்கும் பொருள் பட்டு கொண்டிருப்பதாக சொல்கிறது ஒரு ஆய்வு. எனவே, உங்கள் சூடான கோப்பை தேநீர், காபி அல்லது வேறு எந்த சூடான பானைத்தையும் குடிப்பதற்கு முன்பே, உங்கள் குழந்தையை நீங்களே தொலைவில் இருக்கும் படி வைக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையை நீங்கள் கையில் வைத்து கொண்டு குடிக்கும் போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், நீங்கள் தற்செயலாக நகர முயற்சிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஓட கூட முயற்சிக்கலாம். அப்போது அது தவறி உங்கள் குழந்தையின் மேல் விழுந்து விட கூடாது என்பதற்காக.

4 சூடு செய்யப்பட்ட தண்ணீரின் வெப்பத்தை பரிசோதிக்க மறப்பது


நீங்கள் உங்கள் குழந்தையை ஷவரில் குளிக்க வைக்க போகும் போது, குழாய் நீரில் இருந்து வரும் தண்ணீரின் வெப்பநிலையை சரிபார்க்கவும். தண்ணீர் முழுவதும் அதே போல வரப்போவதில்லை எனும் போது, ஒரு வாளி தண்ணீரை சேகரித்து, உங்கள் குழந்தையை குளிக்க வைப்பது நல்லது. உங்கள் குழந்தையின் தோல் உங்கள் தோலைவிட மிகவும் மென்மையாக இருப்பதால் அதிக வெப்பநிலையால் எளிதில் பாதிப்படையும்.

5 குழந்தையை காரின் முன் சீட்டில் உட்கார வைப்பது

ஒரு விபத்து ஏற்படும் போது, காற்று பைகள் (airbags) தாக்கத்திற்கு எதிராக முன்னணியில் உள்ள பெரியவர்களைப் பாதுகாத்து, அவர்களது உயிர்களை காப்பாற்றும். அதே நம் வாழ்வை பாதுகாக்கும் காற்று பைகள் (airbags) ஒரு 10 வயது குழந்தையின் கழுத்து மற்றும் முதுகு தண்டு வடதில் சில கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த காற்று பைகள் (airbags) குழந்தைகளுக்கு ஆபத்தானவை. எனவே உங்கள் குழந்தையை முன் இருக்கையில் அமர வைக்காமல், உங்கள் அருகில் பின் இருக்கையில் அமர வைப்பது சிறந்தது.

இந்த விஷயங்களை நீங்கள் மனதில் வைத்தால், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த குழந்தைகளை வைத்திருப்போர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிருங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon