Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட பத்து வழிகள்...

படிக்கும் பழக்கத்தை விட சிறந்த பழக்கம் எதுவும் இருக்க முடியாது. ஆனால் சிலர் இது மிகவும் சலிப்பை ஏற்படுத்தும் ஒன்று என்றே கூறுவார்கள். ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தை இதே மனநிலையுடன் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள நல்லவற்றை அவர்களுக்கு காட்டுங்கள். அவர்கள் தான் இது சலிப்பை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

ஒரு பொழுதுபோக்காக படிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு மொழியை புரிந்துகொள்ளவும், கற்பனை திறனை அதிகரிக்கவும், அறிவை வளர்க்கவும் பயன்படுகிறது. இதற்காக தானே குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நீங்கள் எதிர்பார்க்குறீர்கள். புத்தகம் படித்தல் சலிப்பை உண்டாக்கும் என்ற மனநிலையில் உங்கள் குழந்தைகள் வளராமல் இருக்க இதோ சில குறிப்புகள்:

1) சத்தமாக புத்தகங்களை வாசித்து காட்டுங்கள்:

நீங்கள் சத்தமாக வாசிக்கும் பொழுது உங்கள் குழந்தையின் உணர்ச்சிகளை கவனிக்கவும். ஓநாய் ஆட்டிடம் நெருங்கி வந்துகொண்டிருந்தது என்று கூறும் பொழுது அவர்கள் முகத்தில் திகிலின் அறிகுறி இருக்கும். ஒரு நல்ல புத்தகம் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும். அவர்கள் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கதையை பொறுத்து கதாபாத்திரத்தை பொறுத்து நீங்கள் குரலை மாற்றி வாசிக்கலாம். இதனால் குழந்தைகள் உற்சாகம் அடைவார்கள்.

2) பல்வேறு வகையான வாசிப்புப் பொருள்களை வைத்திருங்கள்:

குழந்தைகளுக்கு வாசிப்பில் ஆர்வம் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், பள்ளிப்புத்தகங்களை தவிர அவர்கள் வேறு ஏதும் வாசிப்பதில்லை. உங்கள் வீட்டில் பலவிதமான புத்தகங்களை வைத்திருக்க வேண்டும் - காமிக்ஸ், சிறுகதைகள், கவிதை புத்தகங்கள் போன்றவை. உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.

3) குழந்தையின் விருப்பத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்:

ஆரம்பத்தில், உங்கள் குழந்தைக்கு பிடித்தமான புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை ஒரு பெற்றோராய் நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை படிக்க சொல்லுங்கள் அல்லது நீங்கள் வாசித்து காட்டுங்கள். இதனால் உங்கள் குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும்.

4) உங்கள் குழந்தைக்கு பிடித்த பொம்மை அவர்களின் வாசிப்பு நண்பராக பயன்படுத்துங்கள்:

தனியே வாசிக்க வேண்டும் என்றால், அது குழந்தைகளுக்கு சலிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு தனிமை அறவே பிடிக்காது. மேலும், அவர்கள் நண்பர்களுக்காக ஏங்குவார்கள். எனவே, குழந்தைகள் வாசிக்கும் போதும் சரி, நீங்கள் வாசித்தாலும் சரி, அவர்களின் பொம்மையை வாசிப்பு நண்பராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

5) வாசிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லுங்கள்:

வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து உங்களுக்கு தெரியும். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுது, உங்கள் குழந்தைகளுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூற வேண்டும். இதனால் அவர்கள் புத்தகங்களை பத்திரமாக பராமரிப்பார்கள்.

6) வாசிக்கும் பொழுது வேறு செயல்கள் செய்ய சொல்லலாம்:

குழந்தையை ஒரு இடத்தில் அமர வைத்து கதை கேட்க சொன்னால், அவர்களால் அது முடியாது. இதனால் அவர்கள் விரக்தியடையலாம். இதனை தவிர்க்க அவர்களை கதை கேட்டு படங்கள் வரைய சொல்லலாம். அல்லது அவர்களின் கற்பனையில் ஒரு கதை எழுத சொல்லலாம்.

7) குழந்தைகளின் வாசிப்பிற்கு ஆர்வம் காட்டுங்கள்:

உங்கள் குழந்தைகள் உங்களிடம் வாசிப்பதும் முக்கியமான ஒன்றே. எனவே அவர்கள் வாசித்தாலோ, அல்லது அதிலிருந்து கேள்விகள் கேட்டாலோ, அவர்களோடு அமர்ந்து அதை ஊக்கப்படுத்துங்கள்.

8) நீங்கள் படிப்பதை குழந்தைகள் பார்க்கட்டும்:

உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு நீங்கள் தான் முன்மாதிரி. உங்களின் நடவடிக்கைகள் தான் அவர்களை ஊக்கப்படுத்தும். எனவே, நீங்கள் படித்தால் அவர்களும் படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

9) நூலக நாள்:

வாரத்தில் ஒரு நாள் பள்ளி முடிந்ததும் உங்கள் குழந்தைகளை நூலகத்திற்கு அழைத்து செல்லுங்கள். இதனால் அவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மேலும், பல வகையான புத்தகங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

10) குழந்தைகளை கதை சொல்ல சொல்லுங்கள்:

ஒரு நாளின் இறுதியில் அன்று என்ன நடந்தது என்று குழந்தைகளிடம் கேட்க வேண்டும். அதை ஒரு கதை வடிவத்தில் கூற சொல்லுங்கள். இதனால் கதைகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் பிறக்கும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon