Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளின் நோய்க்கான 5 வீட்டு மருத்துவ குறிப்புகள்

குழந்தைகள், குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு, பலவீனமான மற்றும் வளரும் நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளது. இதன் விளைவாக, அவர்கள் எளிதில் வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, உங்கள் செல்லக்குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிக முக்கியமானது. தற்சமயம் கிட்டத்தட்ட குழந்தைகளுக்கான அனைத்து மருந்துகளும் இரசாயனங்களிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இது குழந்தையின் வளரும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது அல்ல. இதற்கு, மாற்றாக சில இயற்கை முறைகள் காணப்படுகின்றன, இது குழந்தையை கடுமையாக பாதிக்காது. அத்தகைய வழிகளை கண்டுபிடிப்பதற்கு உதவ, நாங்கள் சில தீர்வுகளை பட்டியலிட்டுள்ளோம்.

1 தொண்டை புண்ணுக்கு எலுமிச்சை மற்றும் தேன்

தொண்டை புண்ணுக்கு பொதுவான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வு தேன் மற்றும் எலுமிச்சை ஆகும். தேன் தொண்டை புண்ணை சரி செய்ய உதவுகிறது. மேலும், எலுமிச்சை தொண்டையிலிருந்து பாக்டீரியாக்களை நீக்க உதவுகிறது. இது பண்டைய காலங்களிலிருந்தே இந்தியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு தீர்வு. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் எலுமிச்சை மற்றும் தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபித்துள்ளார்கள்.

2 தலைவலிக்கு வாழைப்பழம்

அனைத்து தலைவலிக்கும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென அவசியம் இல்லை. சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம். தலையில் ஒரு வாழைப்பழத்தை கட்டி விட அது நல்ல அழுத்தம் கொடுக்கும். இதனால் நோய்எதிர்ப்பு அமைப்பில் எந்த பாதிப்பும் இருக்காது மற்றும் வலியும் கட்டுப்படுத்தப்படும். ஆனால் நீங்கள் எப்போதும் அதை செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. தலைவலி கடுமையானதாக இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது.

3 அஜீரண கோளாறுகளுக்கு பபுள் கம்

உணவு எடுத்துக்கொண்ட பின் குழந்தைக்கு வயிற்றுவலி வந்தால் மாத்திரைகள் கொடுப்பதற்கு பதிலாக ஒரு பபுள் கம் கொடுத்தால் போதும். மெல்லும் கம் மற்றும் மெல்லும் செயல்முறை மூலம் வெளியிடப்படும் என்சைம் செரிமானத்தை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக உள்ளது. எனினும், உங்கள் குழந்தைக்கு 4 வயதிற்கு மேலாக இருந்தால் மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

4 குடல்பிடிப்புக்கு செவ்வந்தி டீ

குழந்தைகளுக்கு வயிற்றுக்குள் ஏற்படும் பெரிய பிரச்சினை குடல்பிடிப்பு ஆகும். இதற்கு சரியான சிகிச்சை தரவேண்டியது அவசியமாகும். செவ்வந்தி பூ டீ குடிப்பது இதற்கு நல்ல தீர்வாகும். இது குழந்தைகளின் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆனால், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே குழந்தைகளுக்கு இதை கொடுக்க வேண்டும்.

5 வீக்கம் மற்றும் பூச்சி கடிக்கு பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளை தரக்கூடியது. மேலும், பூச்சி கடிகளையும் குணமாக்கும். நீங்கள் உணரக் கூடிய பூச்சி கடிகள் இயற்கை அமிலமாக இருப்பதால், பேக்கிங் சோடாவின் இயல்பு அதன் விளைவை எதிர்க்கும் திறன் கொண்டது, இதன் மூலம் வீக்கத்தை குறைப்பதோடு, அதனால் ஏற்படும் விளைவுகளை நடுநிலைப்படுத்தவும் முடியும்.

பொறுப்புத் துறப்பு :

உணவு, மருத்துவம் அல்லது உடற்பயிற்சி தொடர்பான எங்கள் வலைப்பதிவுகளில் பரிந்துரைக்கப்படும் எதையும் முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link:  http://bit.ly/2lLVpTJ

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon