Link copied!
Sign in / Sign up
10
Shares

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் 6 வழிகள்

சில குழந்தைகளின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும். சில குழந்தைகளின் நினைவாற்றல் குறைவாக இருக்கும். சில குழந்தைகள் அனைத்தையும் நினைவில் வைத்து கொண்டு அதிபுத்திசாலியாக இருப்பார்கள். சில குழந்தைகள் கவனக் குறைவால் பலவற்றை மறந்து விடுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் படிக்கும் போது ஒரே மாதிரி படித்திருப்பார்கள். ஆனால், தேர்வு முடிவுகளில் மதிப்பெண்களை தவறவிட்டிருப்பார்கள். இது குழந்தையிடம் கவலையை ஏற்படுத்தும். இங்கு குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் வழிகளை பார்க்கலாம்.

1. எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

2. நிமோனிக்ஸ் (mnemonics) வைத்து எதையும் சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள்.

3. படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும்.

4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.

5. மாவு சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது. ஏனென்றால் மாவுச்சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

6. முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை ஷார்ட்டெர்ம் மெமரியில் இருந்து, லாங்டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும் .

ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon